Friday, December 19, 2008

பொது WiFi-க்களில் (Public WiFi Access) Careful!

கோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில் ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.

இதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.

எனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்கு தெரியாமலில்லை. அப்பொழுது நாம் நமது முழு இணைய தகவல்தொடர்பையும் இது போன்ற ஏதோ ஒரு நபரின் இணைய இணைப்பு வழியாய் நடாத்துகின்றோம். அந்த நபரோ நமக்கு தெரியாமல் இடையில் ஒரு கருவியினை வைத்து நாம் நடாத்திய தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகளையெல்லாம் இரகசியமாய் பதிவு செய்துவைத்துக் கொண்டு பின்பு பொறுமையாக அமர்ந்து அப்பொட்டலங்களை பிரித்துபார்த்தால் என் கிரெடிட்கார்டு தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகள் அல்லது நான் அட்டாச் செய்து அனுப்பிய ரகசிய ஆவணங்கள் எல்லாம் அம்பேல் ஆகிப் போயிருக்கும்.

இதனாலேயே பொது வைஃபைக்களில் என் மடிக்கணிணியையோ ஐபோனையோ இணைக்கும் போது மேலோட்டமாக டைம்பாஸ் இணைய உலா வருவதுண்டு.ஜிமெயிலில் கூட நுழைய விரும்புவதில்லை.http வழியாக செல்லும் போது ஜிமெயிலின் பாஸ்வேர்ட் மட்டுமே என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டாலும் உள்தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பது நினைவிருக்கட்டும். http-க்கு பதிலாக https ஜிமெயிலில் பயன்படுத்தினால் உங்கள் முழு ஜிமெயில் சேவையும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்ற பொது வைஃபைக்களிலும் இணைந்து நிம்மதியாக இணைய உலா வர Hotspot Shield அல்லது AlwaysVPNபோன்ற மென்பொருள்களை பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகள் முழமையாக சங்கேதமொழியில் (VPN encryption) நடப்பதால் இடையில் எதாவது மோப்பமென்பொருட்கள் யாராவது வைத்து இருந்தாலும் அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இவற்றின் தேவை இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுஇடங்களில் இப்பாதுகாப்பு மென்னுறைகளை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.

இன்னொரு சின்ன லாபம்:
நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் Hotspot Shield வழி நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்களுக்கு அமெரிக்க ஐபி விலாசம் கொடுக்கப்படுவதால் உங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தளங்கள் திறந்துகொள்வதோடு அரபுநாடுகளிலிருந்து இது வழியாக தடைசெய்யப்பட்ட VOIP அழைப்புகளும் செய்யலாம் என கேள்விப்பட்டேன்.

ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை:
இம்மென்பொருள்கள் உங்கள் தகவல் பொட்டலங்களின் போக்குவரத்துகளை Hotspot Shield அல்லது AlwaysVPN நிறுவன செர்வர்களின் வழி செலுத்துவதால் நீங்கள் இந்நிறுவனங்களில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டுமாக்கும்





Source : http://pkp.blogspot.com/2008/12/wifi.html

Friday, December 5, 2008

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்




உங்களுக்கு தெரியுமா எறும்புகள் கட்டும் ராமர் சேது பாலம்: அடர்ந்த அமேசான் காடுகளில் உள்ள இந்த எறும்பினங்கள் கட்டும் பாலம் அதன் மூலம் ஏரி அல்லது ஆறுகளை கடக்கும் விதம், கடக்கும் போது எதிர்படும் அபாயகரமான சூழல்களை தாண்டி செல்லும் விதம், ராணி எறும்பினை பாதுகாக்கும் முறை ....கண்டிப்பாக கண்கள் பனிக்கும்.

வீடியோ வை காண இங்கே சொடுக்கவும்..

Monday, December 1, 2008

வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் !!


வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் :
சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த வன்முறையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களையும் பார்த்து மிஸ்டர் மிடில் கிளாஸ் பொதுஜனம், ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம், தமிழகத்தில் நடப்பது ஜனநாயகம் என்றும், எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது என்றும் நம்பிக் கொண்டிருப்பது தான். என்ன… இந்த மின்வெட்டால் தான் கொஞ்சம் பிரச்னை; மற்றபடி எல்லாமே இன்ப மயம்!
- இப்படி ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும். ஆனால், நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்திருக்காது. ஒரு உதாரணம்: திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் ஒரு போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்றால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசாங்கம் ஒருநாள் கூலியாக 80 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளோ, ‘40 ரூபாய் தான் கொடுப்போம்’ என்று சொல்ல, தொழிலாளர்கள், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்று தர்ணா செய்தனர். உடனே போலீஸ் வந்தது. தர்ணா செய்த தொழிலாளிகளைக் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து நொறுக்கியது. பல தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
ஒரு நாள் பூராவும் உடல் உழைப்பில் ஈடுபட்டால் அதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கூலி 80 ரூபாய். அதிலும், அதிகாரிகள் தருவது 40 ரூபாய்; எதிர்த்துக் கேட்டால் போலீசை விட்டு அடிப்பர். இந்தச் செய்தியும் தினசரிகளில் புகைப்படத்துடன் தான் வந்திருந்தது. ஆனால், இது நம்மில் யாரிடமும் ஒருவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அங்கே 40 ரூபாய் ஒருநாள் கூலி; இங்கே காபி ஷாப்பில், ஒரு காபி விலை 40 ரூபாய். இப்படிப்பட்ட அதல பாதாள வித்தியாசம், இந்த உலகில் எந்த நாட்டிலுமே இல்லை என்று சொல்வேன். மீண்டும் சட்டக் கல்லூரி சம்பவத்துக்கு வருவோம்… அங்கே நடந்தது, நம் சமூகத்தில் நிலவும் ஜாதிக் கொடுமையின், ஜாதி ஒடுக்குமுறையின் ஒரு விபரீத விளைவு தான். இன்றும் சில கிராமங்களில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
அப்படி நுழைந்தால் கலெக்டர் முன்னிலையில் தான் நுழைய வேண்டியிருக்கிறது. அதுவும் 100 பேர் நுழைவதாக இருந்தால், 500 பேர் கொண்ட போலீஸ் படை பாதுகாப்பு. ஒரு தலித், கோவிலுக்குள் நுழைந்தால், அது ஒரு பெரிய அதிசய செய்தி என்ற அளவில் இருக்கிறது நம் நாடு. மேல வளவுவில் நடந்த கதையும் நமக்குத் தெரியும். ஒரு தலித் ஊராட்சித் தலைவராகி விட்டார் என்பதற்காக, அவரது தலையை வெட்டி உருட்டி விட்டனர். இத்தகைய வன்முறையின் ஒரு வெளிப்பாடு தான் சட்டக் கல்லூரி சம்பவம். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, கிராமங்களில் ஜாதிரீதியான ஒடுக்குமுறை நிலவுவதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முதலில் நிறுத்த வேண்டும். கல்லூரிகளிலும் ஜாதி ரீதியான விடுதிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கக் கூடாது. இப்படிப் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஏன் இது போன்ற ஜாதிக் கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடப்பதில்லை? இதே போன்ற நிர்வாக முறையை சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும். இதேபோல், சென்னையில் மற்றொரு தனியார் கல்லூரியில் ஒரு வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இரவு உணவில் மாட்டுக் கறியைச் சேர்த்து விட்டனர் என்பதைக் காரண மாக வைத்து, பெரும் கலவரம் நடந்துள்ளது. தமிழக மாணவர்கள் மாட்டுக் கறிக்கு ஆதரவு; வட மாநில மாணவர்கள் எதிர்ப்பு. தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டனர்; இதுவும் கிட்டத்தட்ட ஜாதிக் கலவரத்தை ஒத்தது தான். மாட்டுக் கறி உண்பவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் இருப்பவர்; அதை எதிர்க்கும் வட மாநிலத்தவர் மேல் தட்டு. எந்தத் துறையையும் தனியார் வசம் விட்டால் அது அரசுத் துறையை விட மேம்பட்டதாக இருக்கும் என்று ஒரு கட்டுக் கதை நிலவுகிறது. கலவரம் நடந்த அந்தக் கல்லூரி தனியார் கல்லூரி தான். மேலும், பல கல்லூரி நிர்வாகங்கள் வட மாநில மாணவர்களை ஒரு விதமாகவும், தமிழக மாணவர்களை அவர்களைவிடத் தாழ்வாகவும் நடத்துகின்றனர் என்பது மாணவர்களிடையே நிலவும் குற்றச்சாட்டு.
சட்டக் கல்லூரி சம்பவத்தில் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சி அடைந்த மற்றொரு விஷயம், அந்தக் கொலைபாதகச் செயலை போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான். இதற்கு நாம் குற்றம் சொல்ல வேண்டியது போலீஸ்காரர்களை அல்ல; அரசியல்வாதிகளைத் தான். காவல் துறை என்பது தமிழக ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஏவல் துறையாக மாறி, வெகுகாலம் ஆகிவிட்டது. காரணம், ஆளுகிற அரசியல்வாதி நினைத்தால் போலீசை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தத் தண்ணியில்லாக் காட்டுக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போஸ்டிங்கே போடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எடுபிடிகளைப் போல் தான் ஆக்கப்பட்டு விட்டனர். உதாரணமாக, ஒரு அரசியல்வாதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், அவருக்கு மலர்மாலை போட எத்தனை போலீஸ் அதிகாரிகள் யூனிபார்முடன் கியூவில் நிற்கின்றனர் என்று நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். ஏன் இப்படி… எந்த அதிகாரி அதிகமாக காக்கா பிடிக்கிறாரோ, அந்த அதிகாரிக்கே, ‘நல்ல’ துறை கிடைக்கும். இந்த, ‘நல்ல’ என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சில போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் காலில் விழுவதைக் கூட பார்க்கிறோம்.
வேறொரு கால கட்டத்துக்குச் செல்வோம்… காமராஜர் முதல்வராக இருந்த நேரம். கக்கன் போலீஸ் அமைச்சர். அப்போது நேரு தமிழகத்திற்கு வருகிறார். அந்த விழாவில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு கக்கனும் செல்கிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்க வேண்டும். கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பது போலீஸ்காரருக்குத் தெரியாது. ”பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது” என்கிறார் போலீஸ்காரர். உடனே, காரிலிருந்து கக்கன் இறங்கி, விடுவிடு என்று ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார். அந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் இரண்டு பர்லாங் தூரம். அப்போது கக்கன் சொன்னார், ”அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?”
இப்போது இப்படி நடக்குமா… நடந்திருந்தால் அந்தப் போலீஸ்காரரின் நிலைமை என்ன ஆகும்? எப்போதோ, ஒருநாள் மயிலாப்பூரில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த இடமே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி இருந்தது… ஒரே போலீஸ் மயம். பார்த்தால், பாரதிய வித்யா பவனுக்கு முதல்வர் வருகிறாராம். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன்… இங்கே நடப்பது ஜனநாயகம் அல்ல என்று. அமெரிக்காவில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அவரது மகள் சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது டிரைவிங் லைசென்ஸ் பறிக்கப்பட்டது. இதுபோல், தமிழகத்தில் நடக்க முடியுமானால், அப்போது தான் இதை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். அதுவரைப் போலீஸ்காரர்கள், மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறதா என்று கைப்பேசி அழைப்புக்காக காத்துகொண்டு தான் இருப்பர்; கண் முன்னே ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும்… மொத்தத்தில் சொல்லப் போனால், சமூக அளவில் - இப்போதைக்கு ஜாதியை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது; அதுவரை ஒவ்வொரு ஜாதியையும் மற்றொரு ஜாதி சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். அரசியலைப் பொறுத்தமட்டில், போலீஸ், கல்வி, நீதிமன்றம் போன்ற மிக அடிப்படையான துறைகள், அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். அப்போது தான் நம்மால் நல்லதொரு சமூகச் சூழ்நிலையை உருவாக்க முடியும்.
-சாரு நிவேதிதா
எழுத்தாளர், விமர்சகர்
நன்றி: தினமலர்

Tuesday, November 25, 2008

Whom to blame11


 
Boy was born to a couple after eleven years of marriage.

They were a Loving couple and the boy was the gem of their eyes.

When the boy was Around two years old, one morning the husband saw a medicine bottle Open.
 
 
He was late for office so he asked his wife to cap the bottle and keep It in the cupboard. His wife, preoccupied in the kitchen totally forgot The matter.
 
 
The boy saw the bottle and playfully went to the bottle fascinated by Its colour and drank it all.

It happened to be a poisonous medicine Meant for adults in small dosages. When the child collapsed the mother Hurried him to the hospital, where he died. The mother was stunned. She Was terrified how to face her husband.
 
 
When the distraught father came to the hospital and saw the dead child ,

He looked at his wife and uttered just five words.
 
QUESTIONS:
 
1. What were the five words?

2. What is the implication of this story?

ANSWER :
The husband just said "I am with you Darling"
 

The husband's totally unexpected reaction is a proactive Behaviour.

The Child is dead. He can never be brought back to life.

There is no point In finding fault with the mother. Besides, if only he had taken time to Keep the bottle away, this would not have happened.
 
 
No one is to be blamed. She had also lost her only child. What she Needed at that moment was consolation and sympathy from the husband. That is what he gave her.
 
If everyone can look at life with this kind of perspective, there would Be much fewer problems in the world. "A journey of a thousand miles Begins with a single step." Take off all your envies, jealousies, Unforgiveness, selfishness, and fears. And you will find things are Actually not as difficult as you think.
 
MORAL OF THE STORY
 
 
Sometimes we spend time in asking who is responsible or whom to blame, Whether in a relationship, in a job or with the people we know. By this Way we miss out some warmth 
in human relationship.

Monday, November 24, 2008

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!

 
நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில்
குழந்தைகளுக்கான, அறிவுபூர்வமாகவும் கல்வி
சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து கேட்டுப்
பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர். சிறுவர்களை
அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப்
பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும்
வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில்
சிலவற்றை இங்கு காணலாம்.

 

 
சொற்கள் புதிர், சொல் விளையாட்டு என அத்தனையும்
இலவசமாகக் கிடைக்கின்றன. இதனைப் பயன்படுத்திக் கற்றுக் கொடுக்க நினைக்கும்
பெற்றோருக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் கற்றுக்
கொடுப்பது பற்றியும் குறிப்புகள் இருக்கின்றன.


www.starfall.com
 என்ற முகவரியில்
இதனைக் காணலாம்.

 
2) Kids.gov
சிறுவர்களை மனதில் கொண்டு அவர்களுக்குத் தகவல்களைத் தரும்
வகையில் இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வயது
சிறுவனுக்கும் இது உகந்தது. இதில் பெரும்பாலும் அமெரிக்க
அரசின் தளங்கள் குறித்த தகவல்கள் இருந்தாலும் இது தரும்
1200 தளங்களின் தகவல்கள் எந்த சிறுவனின் அறிவுப் பசிக்கும்
தீனி போடுகிறது. டெக்னாலஜி, உடல் நலம் மற்றும் நலம் காத்தல்,
அறிவியல் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் உள்ளன. பள்ளிகளில்
குழந்தைகளை புராஜக்ட் செய்திட வற்புறுத்தினால் இத்தளத்தில்
தகவல்களைப் பெற்று திட்டங்களை வடிவமைக்கலாம். இதன் முகவரி

 

 
3) Homework Spot
இந்த தளம் பள்ளிமாணவர்களின் ஹோம் ஒர்க் வேலைகளுக்கும்
உதவுகிறது. அனைத்து வயது சிறுவர்களுக்கும் உகந்தது.
ஆங்கிலம், மேத்ஸ், சயின்ஸ், ஆர்ட்ஸ், மியூசிக், ஹெல்த்,
லைப் ஸ்கில்ஸ், எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் என
இன்னும் எவ்வளவோ பிரிவுகளில் உதவிடுகிறது.
எனவே ஹோம் ஒர்க் செய்வதில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்
இந்த தளத்தை அணுகுமாறு குழந்தைகளை வழி நடத்தலாம்.
முகவரி 

www.homeworkspot.com

 

 
4) Family Fun
குழந்தைகள் என்றாலே அங்கு வேடிக்கையும் விளையாட்டும்
கட்டாயம் வேண்டும் அல்லவா! இந்த தளம் வேடிக்கை
காட்டுவதோடு பள்ளிக்கூடப் பாடங்கள் சாராத சில
விஷயங்களிலும் சிறுவர்களை ஈடுபடுத்துகிறது.
எடுத்துக் காட்டாக சமைப்பதற்கு, சிறிய சுற்றுலா
செல்ல எப்படி திட்டமிடுவது என்றெல்லாம் கேட்டு வழி
நடத்துகிறது. சில விஷயங்களை மேற்கொள்வது எப்படி
என்பதற்கு சிறு சிறு வீடியோ காட்சிகளுடன் வழி
நடத்துகிறது. இத்தள முகவரி 

http://familyfun.go.com/recipes/kids/

 
5) SciVee: 
உங்களுடைய குழந்தைகள் அல்லது பேரக்
குழந்தைகள் சயின்ஸ் குறித்து அறிய ஆவலுடையவர்களாக
இருக்கிறார்களா! அந்தப் பசிக்கு சரியான தீனி போடும்
தளம் இது. அமெரிக்காவில் இயங்கும் நேஷனல் சயின்ஸ்
பவுண்டேஷன் மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் சென்டர்
ஆகியவற்றின் துணையுடன் இந்த தளம் படு பிரமாதமாக
வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் தாங்கள்
தயாரிக்கும் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், பவர்
பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் இதில் பதிந்து
வைக்கவும் வசதி தரப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
தள முகவரி 

www.scivee.tv
6) Creating Music
மியூசிக்கை விரும்பாத குழந்தைகள் உண்டோ! இந்த தளம்
குழந்தைகளை மியூசிக் டைரக்டர்களாக உருவாக்குகிறது.
ஆம், மியூசிக்கைத் தாங்களே கம்போஸ் செய்திடும் வழி
தருகிறது. வெவ்வேறு மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட்களை
இயக்கும் வாய்ப்பு தரப்படுகிறது. சிறுவர்கள்
தங்களுக்குப் பிடித்த இன்ஸ்ட்ருமெண்ட்டைத்
தேர்ந்தெடுத்து வாசிக்கலாம். இத்தளத்தின் முகவரி:

 

 
7)
KidsClick:
கொஞ்சம் வளர்ந்த சிறுவர்களுக்கானது. எந்த சப்ஜெக்ட்
குறித்து தகவல்கள் வேண்டுமோ அதனைத் தேடித்தரும்
சர்ச் இஞ்சின் போன்ற தளம். ஏறத்தாழ 600
தளங்களிலிருந்து தகவல்களைத் தருகிறது.
சிறுவர்களுக்கு விடுமுறை விடப்படுகிறதா! இந்த
தளங்களைக் காட்டிப் பழக்குங்கள். பின் அவர்கள்
தேவையற்ற டிவி சீரியல்களிலும் வீடியோ கேம்களிலும்
தங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். 4.ரு.
இன்டர்நெட் முகவரியில் கேப்பிடல் லெட்டர்ஸ்  

இளமையிலே முதுமையா?


வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள்
இளமையிலே முதுமையா?
ஆக்ஸிஜனுக்கு அடுத்து நாம் வாழ்வது தண்ணீரால்தான். எண்பது, தொண்ணூறு கிலோ எடை கொண்ட ஒருவரின் உடலில் பத்து காலன் தண்ணீர் இருக்கிறது. இந்தத் தண்ணீர் அளவு குறைந்ததால் முதலில் மூளையில் குழப்பம் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும்போது நான்கு டம்ளர் அருந்தினால் உடனடியாக மனம் அமைதி அடையும். இதேபோல தற்காலிகமாகப் பசியை அடக்கவும் நான்கு டம்ளர் தண்ணீர் போதும்.
குடி தண்ணீரைக் குறைவாக அருந்தினால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
நுரையீரல்களும் தோல் பகுதியும் தண்ணீரை ஆவியாக்கிக் கொண்டே இருக்கின்றன. எனவே, தினமும் ஏழு அல்லது எட்டு டம்ளர்கள் சுடவைத்து ஆறிய தண்ணீர் அருந்துங்கள். ஆரோக்கியம் தொடரும். நுரையீரல்கள் நன்கு சுவாசிப்பதால் மன அமைதி கிடைக்கும். தோலில் வறட்சி ஏற்படாது. அழகாகத் தோற்றமளிக்கலாம். ஆரோக்கியம் தொடரும். முகத்தில் சுருக்கம் விழுவது உடலின் செல்களில் நீர் குறைந்துள்ளதின் அடையாளம்தான்.
கைக்குழந்தைகள் சரியான அளவு குடி தண்ணீர் இன்றியே இருக்கின்றனர். அவர்களின் உடலில் உடனுக்குடன் நீர் குறைகிறது. இந்த உண்மையை அறியாத அம்மாக்கள் கைக்குழந்தைகளுக்கு பாலோ தண்ணீரோ தொடர்ந்து தராமல் தாகத்தால் அவர்களை இறக்க வைக்கின்றனர்.
அதிகமாக வியர்ப்பதும், உடலில் தண்ணீர் அளவு குறைவாகவோ இருக்கும். இவர்களும் நன்கு தண்ணீர் அருந்த வேண்டும்.
உயிரணுக்கள் சரிவர வேலை செய்யவும், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கவும் தண்ணீரே மிகவும் உதவுகிறது. இரத்தத்தில் நீரின் அளவு குறையும்போது இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படவும் வழிவகை ஏற்படுகிறது.
தேநீர், காப்பி, பீர் சாப்பிட்ட பிறகும், அடிக்கடி இவற்றை அருந்துபவர்களும் உடலில் உள்ள நீரை அகற்றுகின்றனர். இதனால் நாக்கு வறட்சியும், முகத்தில் சுருக்கமும் ஏற்படும். இவர்களும் நன்கு தண்ணீர் அருந்தலாம்.
இதயம், சிறுநீரகம், கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு நாக்கு வறட்சி அதிகம் இருக்கும். உடலில் நீர்க்குறைவதால்தான் இவர்கள் தண்ணீர் நிறைய அருந்துகின்றனர். இவர்கள் வெள்ளரிக்காய், தக்காளி, அன்னாசி, பப்பாளி இவற்றின் மூலம், உடல் செல்களுக்கு நன்கு நீர்ச்சத்துக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் 7.8 டம்ளர் தண்ணீரையே இவர்கள் அருந்திக் குணம் பெறலாம்.
மின்பிரிப்பு முறையில் ஒவ்வொரு செல்லுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இரத்த ஓட்டத்த்தில் தண்ணீர் குறைவாக இருந்தால் போதுமான அளவு செல்களுக்கு தண்ணீர் விநியோகம் கிடைக்காது. இதனால் இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். அதற்கு ஏற்ப தோலில் வறட்சியும் சுருக்கமும் ஏற்படும்.
பழங்கள், காய்கறிகளில் உள்ள தண்ணீர், உடலில் தண்ணீர் அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது. தக்காளிச்சாறு எப்படிப்பட்ட தாகத்தையும் உடனடியாகத் தீர்த்து எல்லா செல்களுக்கும் தண்ணீர் கிடைக்கச் செய்கிறது. நன்கு தண்ணீர் அருந்துங்கள். பழங்களும் நன்கு சேருங்கள். ஆரோக்கியத்தை இளமையோடு நீட்டியுங்கள்.

உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள் -


உழைக்கத்தெரிந்தும் பிழைக்கத்தெரியாதவர்கள்
நாள் முழுக்கக் கடுமையாக உழைத்து 100 முதல் 400 ரூபாய் வரை சம்பாதிக்கிற பல்துறைத் தொழிலாளர்கள் உண்டு.
இவர்களது வாழ்க்கையில் என்ன பெரிய மாறுதல்கள் வந்துவிட்டன என்கிறீர்கள்?
இவர்களுள் சிலர் இருப்பதில் சிறிய அளவில் சேமித்து, கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகாமல் இதுவல்ல என் வாழ்வின் உயரம்; இப்படியே தொடர்ந்தால் அதுவே துயரம்; நான் உயர்ந்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இலட்சியத்துடன் போராடும்போது, மேஸ்திரி ஆகி, கண்காணிப்பாளராகி ஒப்பந்தக்காரர் ஆகி, மகத்தான உயரங்களைத் தொட்டவர்கள் உண்டு. ஆனால் இவை மட்டுமே தகுதிகள் ஆகிவிடா. சிரிக்கத் தெரியாதவனைச் சிறப்புகள் சென்றடையா. உர் என்ற முகமும்; சுடுசொற்களும், பிறரிடம் நன்கு கலந்து பேசத் தெரியாத குணமும் ஒருவனைப் பின்னோக்கித் தள்ளும் பரமபத சோபன படத்தில் உள்ள பாம்புகள் போன்றவை.
சொல் சுத்தம், கைச்சுத்தம் இல்லாதவர்கள் தற்காலிய உயரங்களைத் தொடலாம். இமயங்களும் ஆல்ப்ஸ்களும் இவர்களுக்கு உரியன அல்ல.
பிறரை மதியாத போக்கும் காலை வாரிவிடும் தன்மைகொண்டதே. மனத்தில் மரியாதை உண்டாகிறதோ இல்லையோ, உடலில் சொல்லில் இது வெளிப்பட வேண்டும்.
பணிபுரியும் அவ்வளவு இடத்திலும் அரசியல் என்பது நீக்கமற உண்டு. நெருப்பாற்றில் நீச்சல் அடிப்பதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. சாணக்கியனாக மாறி இதை அழகுறச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மனத்தில் தோன்றியதையெல்லாம் பேசிவிடக்கூடாது. இந்த உலகில் வாய் கொண்டு வளர்ந்தவர்களைவிட வாயால் வீணாகிப் போனவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வார்த்தைள் ஒரு கைப்பிடி இல்லாத, இருமுனைகளிலும் கூர்மை கொண்ட கத்தி, குத்துபவனையும் பதம் பார்த்துவிட வல்லது. எனவே சாதுரியம் தேவை.
”நல்லாத்தான். கடுமையாத்தான் உழைக்கிறேன். ஆனாலும் முன்னேற்றமே இல்லையே ஏன்?” என்று கேள்வி கேட்பவர்களுக்கு விளக்கம் தந்துவிட்டேன் என்று நம்புகிறேன்!.

கடவுள் பிடிபட்டார் !!

தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும். தமிலிஷில் வாக்களிப்பதன் மூலம் நிறையப் பேர் இக்கட்டுரையை படிப்பதற்கு நீங்களும் உதவி செய்யலாம். கட்டுரை குறித்த கருத்துக்களையும் மறவாமல் தெரிவிக்கவும். நன்றியுடன் வினவு.
கடவுள் பிடிபட்டார்
நமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை ‘வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு’ என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.
இந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் ‘கடவுளை’ அப்புறப்படுத்த முடியவில்லை.
எல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. “நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்!” “என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா?” ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.
புறவய உலகத்தின் ‘தோற்றம்’ குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் ‘உணர்வு’ குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் ‘கண்டு’, பிறகு அதனை ‘விண்டு’ உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
•••
முதலில் ‘படைப்பு ரகசியம்’ பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.
“இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்” என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், “உலகம் அழியுமா, அழியாதா?” என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் ‘அழியாது’ என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.
நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big Bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்பை, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா? இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (Mass and Weight) வழங்கியது எது? என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.
புரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் ‘ஹிக்ஸ் துகள்’ என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (Mass) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை ‘கடவுள் துகள்’ (God Particle) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.
களிமண்ணை உருட்டினால் கடவுள்!
கடவுளை உருட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்!
‘ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே’ என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (Collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் ‘கடவுள் துகளை’த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், “இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்?” என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது ‘பிரம்ம ரகசியத்தை’க் கண்டறிந்து விட முடியும்.
ஒருவேளை தோற்றுவிட்டால்? “40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது? அறிவுத் தேட்டம்தானே!” என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.
“எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்” என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், ‘அவிசுவாசிகள்’ உருவாக்கிய கணினியின் வழியே, ‘தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி’யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சித்தத்தினுள்ளே சதாசிவம் எங்கே?
வளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார்? மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் ‘காட்சி’ தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் ‘இறங்குகிறார்’ ? இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பயல் மருத்துவம்.
“மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான ‘ஆன்மீக அனுபவங்கள்’ ஏற்படுகின்றன” என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.
இந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்கு ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, ‘தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக’க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் ‘கண்ட’ காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் ‘அனுபவத்தை’ ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள் தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.
“செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் ‘ஏசு அவர் முன் ‘தோன்றத்’ தொடங்கினார்” என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய ‘இறையருள்’ கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய ‘உள்காயம்’ ஏற்படக்கூடும்.
“இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் ‘டெம்பரல் லோப்’ என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன” என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.
“ஒருவேளை மூளையில் கடவுள் ‘குடியிருக்கும்’ இந்தப் பகுதியை (God Spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம்? அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா?” என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்? இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. “கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது?” என்று அவர்களை ‘சமாதானப்படுத்தினார்’ ராமச்சந்திரன். அப்படியொரு ‘ஆன்மீக ஆன்டனா’வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.
கோவில் கனெக்சன் இல்லாமலேயே
கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா!
காட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம்! இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் ‘கவச’ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.
டேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI Scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், ‘அந்நிய பாஷை’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.
தியானத்தில் ஈடுபடும்போது, ‘தான்’ என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற ‘பாரிடல் லோப்’ செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.
இவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சாடனங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் ‘அமானுஷ்யமானவை’ என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட ‘ஆன்மீக அனுபவங்களை’த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.
மூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று ‘ஆன்மீக மூலக்கூறு’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், ‘இறை நரம்பியல்’ (Neuro Theology) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.
எனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. “மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத ‘பரவச உணர்வுகளோ’, வெளியே கடவுள் என்பவர்இருப்பதற்கான ஆதாரமாக முடியாது” என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.
ஏசு இறங்கினாரா?
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்!
மதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.
பெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, “ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர்? ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்” என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.
பொருளும் சிந்தனையும்:
புரட்சி எனும் ஹைட்ரான் கொலைடர்!
இயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து ‘கடவுளை’ அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் ‘சோதனையும்’ ஒப்பீட்டளவில் கடினமானவை.
உலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.
எந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், ‘கல்விச் சுதந்திரம்’ என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.
‘டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்’ என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெற்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).
விவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். “குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை?” என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.
“அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.
புதிய கலாச்சாரம், அக்’08 இதழிலிருந்து (அனுமதியுடன்)

Thursday, November 13, 2008

பேசுவதால் என்ன ??

அளவுக்கு அதிகமாக பேசுபவர்கள்,
வெறுப்பு நிறைந்தவர்கள்,
எதிலும் திருப்தியற்றவர்கள்,
எதற்கும் சிடுசிடுத்துக் கொண்டு பேசுபவர்கள்,
எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்கள்,
பிறரை சுரண்டி வாழ்பவர்கள்,
பொறாமை எண்ணம் கொண்டவர்கள்,

இந்த ஏழு வகையான மனிதர்களும் ஒரு நாளும் மனநிம்மதியுடன் வாழமாட்டார்கள். உணர்வுகளால் இழுக்கப்பட்ட இவர்களுக்கும், மிருகங்களுக்கும் வேறுபாடு கிடையாது.

மிருகங்கள் கூட தங்களுக்கு ஆபத்து வரும் போது மட்டுமே தங்களை தற்காத்துக் கொள்ள தப்பியோட வழி இல்லாமற் போனால் மட்டுமே தாக்குதல் தொடுக்கின்றன. ஆனால் மனிதனுக்கு கோபமூட்ட சீற்றத்தால் எதிரி மீது தைநீட்டச் செய்ய ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம் போதும்.

"சித்தம் எவ்வளவு தான் பக்குவப்பட்டாலும், ரத்தம் பேசத் தொடங்கும் போது - மொத்த ஞானமும் கெட்டுப் போகிறது" – என்கிறார் கண்ணதாசன்.

சண்டை போட்டுக் கொண்டே இருந்தால், விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே இருந்தால் நமக்குள் நிம்மதி இருக்காது. போராட்டம் பண்பைப் போக்கி வாழ்வைப் பாழாக்கி விடும். சண்டையினால் விபரீதங்கள் தான் தான் ஏற்படும். பொருள், உறவு, அன்பு, ஆகியவை ஒழிந்துப் போகும்.

சண்டைகளும், கோபமான விவாதங்களும், மனிதனின் மூளையின் அதிர்வுகளை அதிகரிக்கச் செய்யும்.

மனிதன் சாதாரண நிலையில் விழித்திருந்து செய்யும் செயல்களான நடத்தல், பேசுதல், கேட்டல், எழுதுதல், உண்ணுதல், என்னும் ஐம்புலன்களால் காரியங்கள் செய்யும் போது நம்மூளை வினாடிக்கு 13 - அதிர்வுகளோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

குரலை உயர்த்திப் பேசும் போது 14- ல் இருந்து 16 - ஆக உயரும்.

சூடான வாதப்பிரதிவாதங்கள் சண்டை என்ற நிலையில் அதிர்வுகள் வினாடிக்கு 17 - ல் இருந்து 20 - ஆக அதிர்வு உயரும்.

மிகவும் மனஉளைச்சலில் இருக்கும் போது மனக்குழப்பத்தில் இருக்கும் போதும் 21 - லிருந்து 32 - அதிர்வுகளாகி 32 - அதிர்வுகளைத் தாண்டும் போது பைத்தியம் என்ற நிலை ஏற்படும்.

உணர்ச்சி வசப்படும் போது மூளையின் அதிர்வுகள் அதிகரிக்கும் போது
ரத்த அழுத்தம் அதிகமாகிறது. ரத்த அழுத்தம் அதிகமாகும் போது நெஞ்சு வேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, பேச்சு குளறுபடியாகிறது. உடல் முழுவதும் சூடாகிறது. உடல் நடுக்கம் ஏற்படுகிறது. மொத்தத்தில் சமநிலை தவறுகிறது.

இந்த சமயங்களில் மனப்புழுக்கத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளேயே வைத்து மருகும் நிலையில் இன்னும் தீவிரமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு பி.பி, சர்க்கரை வியாதி, ஆஸ்துமா ஏற்படுகிறது என்று மனத்ததுவ நிபுணர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்.

ஆகைகயால் மனம் பாதிக்காத வண்ணம் இருப்பதற்கு கையாளப்படும் வழிகளுக்குள் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மற்றவர்களுடன் பழகும் போது தான் நாம் நடைமுறை வாழ்க்கைக் கல்வியை கற்கிறோம் என்பதை நாம் உணர வேண்டும். பேசுவது, கேட்பது, சிரிப்பது, கோபப்படுவது, அழுவது, பயப்படுவது, சோர்வது, போன்ற பல செயல்களை நாம் பிறருடன் பழகும் போது சூழ்நிலைக்கு ஏற்ப செய்கிறோம்.

இவற்றை உணர்ந்து கொள்ள முடிந்தாலும் மிகச் சிலரால் தான் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நமக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால் நம்முடைய பேச்சக்கள் நம் கட்டுப்பாட்டுக்கள் இருக்க வேண்டிய விஷயம் என்பதை மறந்து விடக்கூடாது.

பேச்சுக்களைப் பற்றி ஞானிகள் பல கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்:

*** "பேச்சை விட செயலுக்கே வலிமை அதிகம்".

*** "சபையில் நீங்கள் கடைசி பெஞ்சில் போய் யாரும் அறியாமல் உட்கார்ந்து விட்டு வரவேண்டும் என்றால் யாரும் உங்களைக் கண்டுக் கொள்ளப் போவதில்லை. இது எனக்கு அதிகம் தெரியாது என்று பேச ஆரம்பித்தீர்களானால் நீங்கள் அடக்கத்திற்கு கூறினாலும் உலகம் உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக் கொள்ளும். நீங்கள் உங்களை எப்படி மதிப்பப் போடுகிறீர்களோ அது போல் தான் உங்களையும் மதிக்கும். இது உலக இயல்பு." - ( மனோதத்துவ அறிஞர்கள்.)

*** "பேசாதீர்கள் செயல்படுங்கள்.
அறிவிக்காதீர்கள் செய்து முடியுங்கள்."

*** "நாம் எதை உள்ளே போடுகிறோம் என்பது முக்கியம் அல்ல.உள்ளிருந்து பேச்சியினாலும் நடவடிக்கையினாலும் எதை வெளியே விடுகிறோம் என்பது தான் முக்கியம்". – ( காந்தியடிகள் )

*** "நமது அடிப்படைப் பலவீனம் எதுவுமே நம்முடைய வெறும் தோற்றத்தின் மூலம் வெளியாகி விடுவதில்லை. நம்முடைய செயல்களால் கூட அவை அவ்வளவாக வெளிப்பட்டு விடுவதில்லை. நம்முடைய பேச்சுக்களால் தான் வெளிப்படுத்தப்படுகின்றன."

*** "மனிதனிடம் இருவகை வெளிப்பாடுகள் உண்டு. ஒன்று பேச்சு – மற்றது செயல். ஒன்றில் கவனம் செலுத்துகிறவர்கள் மற்றதைக் கோட்டை விட்டு விடுவார்கள். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் - சாதிப்பவர்கள் பேசுவதில்லை.பேசுபவர்கள் சாதிப்பதில்லை."

*** "புகைப்பிடிப்பவனை உன் வீட்டிற்குள் அனுமதி.

மது அருந்துபவர்களைக் கூட அனுமதி, ஆனால்

அதிகம் பேசுகிறவனை அனுமதித்து விடாதே."

*** "குழப்பமுள்ள பேச்சு –குழப்பம் நிறைந்த மனதிலிருந்து புறப்படுகிறது. அதேப்போல் குழப்பமாக கோபமாக இருக்கும் போது, தளர்ந்து உடல் ஓய்ந்து இருக்கும் போது, நிலைமை நெருக்கடியாக இருக்கும் போதெல்லாம் நாம் அவசரப்பட்டு முடிவெடுக்கக் கூடாது. நெருக்கடியின் சமீபம் நம் பார்வையின் தெளிவைப் பாதிக்கும். அச்சமயங்களில் சில மணிநேரம் கழித்து விஷயங்களை அணுகும் போது நமக்கு ஒரு நிதானம் ஏற்படுகிறது. பேச்சும் தெளிவாக வருகிறது." (மனதத்துவ அறிஞர்கள்)

*** "கண்ணெதிரில் உரிய நபர் இல்லையென்றவுடனெயே கருத்துச் சுதந்திரத்தோடு பேச ஆரம்பித்து விடுவது மனித இயல்பு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமது மனம் ஒன்றை எண்ணுகிறது. வாய் வேறொன்றைப் பேசுகிறது. செய்யும் காரியமோ வேறொன்றாக இருக்கிறது. அதாவது-நம் மனம் மொழி மெய்களுக்குள் ஒருமைப்பாடு இல்லை. இம்முரண்பாடு தான் மனிதவர்க்கத்தின் பலவீனத்திற்கே அடிப்படைக் காரணம். பலவீனத்திலிருந்தே நமது துன்பங்கள் அனைத்தும் விளைகின்றன."

*** "ஒப்பிட்டுப் பார்பது, பகுத்துப்பார்ப்பது, நடுநிலையுடன் ஆராய்வது, மதிப்பிடுவது, ஏற்றுக் கொள்வது, தீர்மானிப்பது, என்ற வகையில் சுய அறிவுடன் தேவையான நேரத்தை சிந்தனைக்கென்று செலவழித்தால் நம்மிடமுள்ள முரண்பாடுகளை நம்மால் நிச்சயம் வெல்ல முடியும். எண்ணமும் பேச்சும் செயலும் ஒன்றுபடும் போது நம் வெற்றி பலமடங்காகிறது, உயர்வது எளிதாகிறது."

*** "நம்மைப்பற்றி நாமே உயர்வாக எண்ணிக் கொள்கிறோம். அல்லது நம்மைப்பற்றி நாமே மற்றவர்களிடம் உயர்வாக பேச முற்படுகிறோம் என்றால், நம்முடைய பலவீனத்தை அதாவது தாழ்வுநிலையை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகத்தான் அது இருக்கும்."

*** "யார் பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல.

என்ன பேசுகிறார்கள் என்பது தான் முக்கியம்."

*** "தெளிவான பேச்சு தூய்மையான உள்ளத்தின் எதிரொலி".
(வில்லியம் லா. 1686 – 1781)

*** "எவரிடம் பேசுகிறோம், எவரைப்பற்றி பேசுகிறோம், எப்படிப் பேசுகிறோம், எப்பொழுது பேசுகிறோம், எங்கு பேசுகிறோம் என்பதில் விழிப்பாக இருந்தால் கவலைப்பட வேண்டி இருக்காது." - (நோரிஸ்)



Source : http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=04&article=390

Illusion !!

ஒரே ஓவியத்தில் இரு ஓவியங்கள் மறைந்துள்ளன,

பெண்ணின் முகமா ? ரோசா செடியா?








இந்த முகத்தில் 28 விலங்குகள் உள்ளன? கண்டுபிடியுங்கள்






இவை அனைத்தும் முப்பரிமான ஓவியங்கள், உண்மையானவை அல்ல?























ரோசாக் கூட்டத்தின் இடையே ஒரு மனித முகம்?







இந்தப் படத்தில் ஒரு மனித முகம் உள்ளது கண்டுபிடிக்க முடிகிறதா?





இந்த வளையம் எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முடிகிறதா?

இந்த விதைகள் நிற்கின்றனவா? அசைகின்றனவா?




இந்தப் படத்தை எவ்வளவு நேரம் உங்களால் பார்க்க முடிகிறது?




இந்தப் படத்தில் உள்ள சதுரங்களுக்கு நடுவில் வரும் கறுப்புப் புள்ளிகளை எண்ணுங்கள் பார்ப்போம்?






இது மலையும், அருவியுமா? அல்லது பெண்ணும், முனிவருமா?




கோட்டை சுவரா? கட்டுமரப் படகுகளா?






படங்கள் உங்களைக் கவர்ந்தனவா? கீழே உள்ள வோட்டைப் போடுங்கள் . உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் .



Source : http://arivili.blogspot.com/2008/11/28.html