Wednesday, October 29, 2008

கிபி 0001-ல் இந்தியா!!!!

புள்ளிவிவரங்களுக்கேற்ப உலக நாடுகளின் வரைபடத்தை பெரிதாக்கியும் சிறிதாக்கியும் வெவ்வேறு அளவுகளில் வரைந்து பல விஷயங்களை நமக்கு எளிதாக புரியவைப்பதில் கில்லாடிகள் Worldmapper.org காரர்கள். அவர்கள் வரைந்திட்டுள்ள உலகவரைபடங்கள் பல கதைகளை சொல்லும்.
கீழே நீங்கள் காண்பது கிபி 1-ல் உலகின் ஐஸ்வர்யம் பொருந்திய நாடுகளின் மேப். இந்தியா என்னமாய் பெருத்திருந்திருக்கின்றதென பாருங்கள்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழிந்திருக்கின்றது. செல்வச்செழிப்பில் இருந்திருக்கின்றோம். விலைமதிக்க இயலாத பொக்கிஷங்கள் இங்கிருந்தன. கோவில்களிலும் அரண்மனைகளிலும் இருந்த வேலைப்பாடுகளுக்கு விலை குறிக்க முடியாது. மயிலாசனம் முதல் கோகினூர் வைரம் வரை இங்கிருந்தன. வாசனை திரவியங்கள், யானை தந்தங்கள், பூம்பருத்தி ஆடைகள் இவற்றுடன் மயிலும் மிளகும் ஏற்றுமதி ஆயின. அவற்றிற்கு பதிலாக பொன்னும் மணியும் வந்து குவிந்தன. திரைகடல் ஓடியும் திரவியம் தேடினர். பலதுறைகளிலும் வல்லுனர்கள் இருந்தார்கள். இப்படி ”கிபி ஒன்றில்” இந்தியா பெருத்திருந்தது. அடுத்து நம்மை நெருங்கி வந்தது சீனா மட்டுமே. அமெரிக்காவும் ஐரோப்பாவும் அப்போது ஒல்லிப்பிச்சான்களாய் இருந்தன.
1835-ல் பாரதபூமியை சுற்றி பார்த்த ஒரு பிரிட்டீஷ்காரரின் வாக்குமூலத்தை பாருங்கள்.
இந்த நிலை கிபி 1500 வரை நீடித்தது.
அப்புறம் வந்த எந்திர தொழில்புரட்சி மேற்கை பருமனாக்கியது என்கின்றார்கள்.
1900-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.
ஆப்ரிக்க நாடுகள் இன்னும் தேய்ந்து கழுதை கட்டெறும்பாகிக்கொண்டிருக்க 2015-ல் சீனா வீங்கி விட்டதையெல்லாம் மீட்டெடுக்கும் என ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள்.
2015-ல் உலகம் செல்வச்செழிப்பின்படி.
source : http://pkp.blogspot.com/2008/10/0001.html

Wednesday, October 22, 2008

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்!

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.
முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.
அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்குபடிக்கலாம்.
சில குறிப்புகள்:
1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.
2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.
3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.
5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

Source : http://porulsey.blogspot.com/2008/03/blog-post_4260.html

வாடிக்கையாளர் சேவை - ஒரு தவறின் கதை!

வாடிக்கையாளர் நிறுவனத்தில் அவர்கள் விற்க வேண்டிய தோலுக்கான தேவை பல இடங்களிலிருந்து வரும். அவற்றை மென்பொருளில் போட்டு விடுவார்கள். அவற்றுக்கு எதிரான உற்பத்தி விபரங்கள், உற்பத்தி முடிந்த பிறகு பொருளை அனுப்பி வைக்கும் விபரங்களும் உள்ளிட்டு விடுவார்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் நூற்றுக் கணக்கான ஆர்டர்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் கேட்கப்பட்ட அளவு, இதுவரை அனுப்பி வைக்கப்பட்டது, இனிமேல் அனுப்ப மீதியிருப்பது என்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 10000 அடி தோல் கேட்டிருக்கிறார் ஒரு வாடிக்கையாளர். முதலில் 4000 அடி உற்பத்தி செய்து ஒரு பொதியை அனுப்பி விட்டார்கள். இன்னும் மிஞ்சியிருப்பது 6000 அடி. அடுத்ததாக 1500 அடி அனுப்பி வைத்தால் 10000, 5500, 4500 ஆகி விடும்.

இந்த 4500 அடி அனுப்ப வேண்டும் என்றால் மூலப் பொருளை உற்பத்திக்கு எடுத்து நான்கைந்து நாள் வேலைக்குப் பிறகு தயாராகி அனுப்பலாம். எவ்வளவு உற்பத்தியில் இருந்து கொண்டிருக்கிறது, இன்னும் எவ்வளவு மூலப்பொருளிலிருந்து உற்பத்திக்குக் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

4500 அடி இன்னும் தேவை. 2500 அடிக்கு உற்பத்தியில் இருக்கிறது. மீதி 2000 அடிக்கு புதிதாக உற்பத்திக்கு அனுப்ப வேண்டும். இதுதான் கணக்கு.

மொத்தத் தேவை 10000
அனுப்பி விட்டது 5500
அனுப்ப வேண்டியது 4500
உற்பத்தியில் இருப்பது 2500
இன்னும் எடுக்க வேண்டியது 2000

இதுதான் கணக்கு. இதே போல நூற்றுக் கணக்கான ஆர்டர்கள். பல ஆர்டர்கள் ஒரே பொருளுக்கு இருக்கும். ஒரு ஆர்டருக்கு எதிராக உற்பத்தி செய்து விட்டு அவசரம் என்றால் இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி வைத்து விடுவதும் நடக்கும்.

புதிதாக ஆர்டர் வந்தால் அதை ஒரு இடத்தில் பதித்து வைத்துக் கொள்வோம். அந்த ஆர்டர் எண்ணையும், மொத்தத் தேவை அளவையும் ஆர்டர் நிலுவை விபரங்கள் என்று பதிந்து கொள்வோம்.

பொருள் அனுப்பும் போது எந்த ஆர்டருக்காக அனுப்புகிறார்கள் என்ற விபரத்தை வாங்கி அதையும் நிலுவை விபரங்களில் தனியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பொருளை உற்பத்திக்கு எடுக்கும் போதும் ஆர்டருடன் இணைத்து குறிப்பிட்ட ஆர்டருக்கு எதிராக இவ்வளவு உற்பத்திக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

இன்னொரு விபரம் என்ன வேண்டும் என்றால் உற்பத்தியில் தற்போது எவ்வளவு இருக்கிறது என்பது. ஒரு ஆர்டருக்கு எடுக்கப்பட்ட பொருளை இன்னொரு ஆர்டருக்கு அனுப்பி விடுதலும் நடக்கும் என்பதால் இதையும் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

உற்பத்திக்கு என்று விபரங்களை உள்ளிடும் போது உற்பத்தியில் இருப்பதுடன் போய்ச் சேர்ந்து கொள்ள வேண்டும். உற்பத்தி முடிந்து பொருளை வெளியே எடுக்கும் போது அந்த அளவில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும். வெளியே எடுக்கப்பட்டது அதே ஆர்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அது அனுப்பி விட்டது கணக்கில் சேர்ந்து விடும். மாறாக வேறு ஆர்டருக்கு அனுப்பி விட்டால், புதிதாக உற்பத்தி செய்துதான் இந்த ஆர்டரை பூர்த்தி செய்ய முடியும்.

எங்கள் மென்பொருள் வடிவமைப்பில் பலவிதமான சரக்கு அறைகள் (மூலப் பொருள் அறை, பாதி பணி முடிந்த பொருள் அறை, இறுதிப் பொருள் அறை) இருக்கும். அவற்றிலிருந்து உற்பத்திக்கு மூலப் பொருளை அனுப்பலாம், உற்பத்திப் பணி முடிந்ததும் அதே அறைக்கு அல்லது வேறு அறைக்கு முடிந்த பொருளை சேர்த்து விடலாம்.

சரக்கு அறைக்குள் தரம் பிரித்தலும் நடக்கும்.

10000 அடி பச்சைத் தோல் வாங்கினால் அது ஒரு சரக்கு நுழைவாக பதிந்து விடும். அதன் குறிஎண் 1312 என்று வைத்துக் கொள்வோம். அதை 5 தரங்களாகப் பிரித்தால் 1313, 1314, 1315, 1316, 1317 என்று ஐந்து புதிய நுழைவுகளை ஏற்படுத்தி ஒவ்வொன்றிலும் அது 1312லிருந்து வந்தது என்பதையும் குறித்துக் கொள்வோம்.

இப்போது 1313, 1314, 1315 மூன்றையும் சேர்த்து 6000 அடி உற்பத்திக்கு அனுப்புகிறோம் என்றால் மூன்றையும் சேர்த்து 1318 என்று ஒரு சரக்குக் குறி உருவாகி விடும். அது மூன்று சரக்குகளிலிருந்து வந்தது என்ற விபரமும் இருக்கும். 1318 என்பது உற்பத்தியில் இருக்கும் சரக்கு.

உற்பத்திப் பணிகள் முடிந்ததும் அந்த 6000 அடியை இறுதிப் பொருள்களுக்கான சரக்கு அறைக்கு அனுப்பும் போது தரம் பிரித்தல் செய்வார்கள். அது மூன்று தரங்களாக அது பிரிந்தால் உற்பத்தியிலிருந்து வந்ததாகக் குறிக்கப்பட்டு மூன்று சரக்குக் குறியீட்டு எண்கள் இறுதிப் பொருள் அறையில் உருவாகி விடும்.

நம்ம கணக்கில் பார்த்தால் 6000 அடி உற்பத்திக்கு அனுப்பும் போது, அது எந்த ஆர்டருக்கு அனுப்பப்படுகிறதோ அதன் எதிரில் கணக்கு சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். 6000 அடி உற்பத்தி முடிந்து வெளியே இறுதிப் பொருள் அறைக்கு எடுக்கப் படும் போது அந்த ஆர்டருக்காக உற்பத்தியில் இருக்கும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிக்கல் எங்கு ஆரம்பித்தது என்றால், தரம் பிரிப்பு விபரங்களை உள்ளிடுவதற்கான நிரல் இரண்டு வேலைகளைச் செய்யுமாறு எழுதியிருந்தோம். சரக்கு அறைக்குள் தரம் பிரித்தல் ஒரு வகை, உற்பத்தியிலிருந்து தரம் பிரித்து சரக்கு அறைக்கு அனுப்புதல் இன்னொரு வகை. குறிப்பிட்ட சரக்குக் குறியீட்டு எண் உற்பத்தியுடன் தொடர்புடையதாக இருந்தால் மட்டும் அதன் குறிப்பில் தனி குறிப்பு சேர்த்து விட வேண்டும்.



Source  : http://porulsey.blogspot.com/2008/08/blog-post_2487.html

ஸ்டாக் மார்கெட்டும் குரங்கு வியபாரியும்.!

அன்று:

மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா?


ங்...

ஒன்று ஆயிரம் ரூபாய்...

வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே?


இன்று:
மச்சி என்ன சோகமா இருக்கெ?

ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா?

என்னடா....

வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை.

ங்...

ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும்.

* * *

ஒரு ஊரில் ஒரு குரங்கு வியபாரியாம், அவன் ஒரு நாள் ஒரு குரங்குக்கு 10 ருபாய் தருவதாக அறிவித்தான். அக் கிராம மக்களோ சும்மா தொல்லை தருகின்ற குரங்குதானே என்று அதை பிடித்து அந்த வியபாரியிடம் விற்றார்களாம். ஒரு மாதத்திற்கு பிறகு அந்த வியபாரி ஒரு குரங்குக்கு 500 ரூபாய் என அறிவிக்க, கிராமமக்களோ செய்யும் வேலையும் விட்டு விட்டு முழு நேர குரங்கு பிடிக்கும் தொழில் இறங்க, அக்காட்டில் குரங்கு கிடைப்பதே அபூர்வமானதாம்.

இப்படியே ஒரு நாள் அந்த வியபாரி, ஒரு குரங்குக்கு 1000 ரூபாய் தருவதாக அறிவிக்க, மொத்த கிராமமே குரங்கு பிடிக்க அலையாய் அலைந்தும், ஒரு குரங்கைக் கூட பார்க்க முடிய வில்லையாம்.

அந்த நேரம் பார்த்து அந்த வியபாரி மொத்த குரங்கு கொள்முதலையும் தன் உதவியாளனிடம் விட்டுவிட்டு வெளியூர் சென்றானாம்.

குரங்கு கிடைப்பது குதிரைக் கொம்பாய் இருக்க, அந்த உதவியாளன் ஒரு உபாயம் செய்தானாம். அவன் தன் முதலாளிக்குத் தெறியாமல் மக்களிடம் ஒரு குரங்கு 800 ரூபாய்க்கு விற்க தாயார் என்று அறிவிக்க, ஊரே அல்லோகலப்பட்டது. தன் ஆடு, மாடு, வீடு, தோடு என்று எலாவற்றையும் விற்று, குரங்கு வாங்கி, அந்த குரங்கு வியபாரி வந்ததும் அவனிடம் விற்று பெரிய இலாபம் சம்பாதிக்கும் கனவில் இருக்க. நடந்ததெ வேறு.

அந்த குரங்கு வியபாரியும் அவன் உதவியாளனும் அந்த ஊர் பக்கமே திரும்பவில்லையாம். மக்கள் விலைமதிப்பில்லா குரங்குகளோடு மல்லுக்கட்டுவதாக செய்தி!

மாரல் ஆஃப் த ஸ்டோரி:
ஸ்டாக் மார்க்கெட் பற்றி முழுமையாகத் தெறியாமல் அதில் முதலீடு செய்யக் கூடாது. வாங்கி விற்பது சுலபம், ஆனால் சரியான நேரத்தில் வாங்கி, சரியான நேரத்தில் விற்பது கடினம், மிக மிக கடினம்.

மூலம்: எங்கேயோ படித்தது!

Source : http://rajakumaaran.blogspot.com/2008/10/blog-post_21.html

கரடி விடுறாங்க!

அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட் பெரிய வேட்டைக்காரர்வேட்டையாட கிளம்பினார் எதையாவது வேட்டையாடம திரும்ப மாட்டாரு.
கரடியை வேட்டையாடுவது கவுரவமாக கருத பட்ட காலமா அது. அவரோட கெட்ட நேரமா இல்ல கரடியோட நல்ல நேரமானு தெரியல மூன்று நாட்கள் அலைந்து திரிந்தும் ஒரு கரடி கூட கிடைக்கவில்லை.எல்லா கரடியையும் சுட்ட எங்குட்டு இருந்து கரடி வரும் அதானால மனுஷன் இன்னிக்கி வேட்டை இப்படி வெத்து துப்பாக்கி மாதிரி போச்சு என்று ரொம்ப பீல் பண்ணுனாரு..... நெசமா..............................
அப்பறம் அவரோட படை (சொறி,சிரங்கு) காட்டை சல்லடை மாதிரிசலிச்சு காட்டுக்குள்ள சும்மா படுத்து கிடந்த ஒரு வயசான கரடியை கட்டி தர தர என்று இழுத்து வந்தார்கள் ரூஸ்வெல்ட் சுடுவதர்க்காக ஆனால் கரடியின் பரிதாப நிலையினை கண்ட ரூஸ்வெல்ட் அதை சுடவில்லை மேலும் அதை விட்டுவிடுங்கள் என்று கூறினார்.
இந்த சம்பவத்தை கேள்வி பட்ட, கிளிபோர்ட் பெரிமென் என்ற கார்டூனிஸ்ட், கழுத்தில் கயிறு கட்டப்பட்ட கரடி ஒன்றை ஒருவர் பிடித்து கொண்டு இருப்பது போலவும், ரூஸ்வெல்ட் அதனை சுட மறுப்பது போலவும் கார்டூன் ஒன்றை வரைந்தார். அது வாசிங்டன் என்ற பத்திரிக்கையில் வெளியானது.மறுநாள் வேறொரு பத்திரிகையில் வெளியான இந்த கார்டூனில் கரடி மிக சிறியதாகவும் மேலும் பயத்தில் நடுங்கிக்கொண்டு இருப்பது போலவும் இருந்தது.இந்த கார்டூனை மக்கள் வெகுவாக ரசித்தார்கள்.


மோரிஸ் மைக்டாம் என்பவரும் ரசித்தார் ஆனால் வித்தியாசமாக பட்டு துணி வைத்து கரடி பொம்மை செய்யும் அளவிற்கு. தான் செய்த கரடி பொம்மையை சாக்லட், பொம்மை விற்கும் தன்னுடைய கடையில் கார்டூன் உடன் சேர்த்து வைத்தார். இதை பார்த்த மக்கள் கரடி பொம்மை வாங்கினார்கள் மேலும் மேலும் மோரிஸ்க்கு கரடி பொம்மை ஆர்டர் வர துவங்கியது.

மோரிஸ் மைக்டாம் ரூஸ்வெல்ட்க்கு ஒரு கடிதம் எழுதினார் அதில் அவர் உருவாக்கிய கரடி பொம்மைக்கு தியோடோர் ரூஸ்வெல்ட் பெயரை வைக்க விருப்பபடுவதாக தெரிவித்தார். ரூஸ்வெல்டும் தனக்கு எந்த ஆட்சபனையும் இல்லை என்று கடிதத்திற்கு பதில் அனுப்பினார். 
மோரிஸ் தியோடோர் (theodore) என்பதை சுருக்கி "டெட்டி பியர்" (Teddy Bear) என பெயரிட்டு விற்பனை செய்தார். இன்று வரை பலரது "பெட் பார்ட்னராக" இருப்பது இந்த "கெட்டி பீர்" அய்யா மனிசுடுங்க "டெட்டி பியராக" (super figura) இருப்பது இந்த கரடி பொம்மை தான்.

Source  : http://madurainanpan.blogspot.com/2008/10/blog-post_4081.html

Tuesday, October 21, 2008

சந்திரனுக்குப் போகும் விண்கலம்!!

ஒரு கனமான ஈர்ப்பு மண்டலத்தைத் தாண்டி மற்றோர் ஈர்ப்பு மண்டலத்துக்குள் போவது எளிதான விஷயம் அல்ல. சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பல பத்தாண்டுகளுக்கு முன்னரே செய்திருந்தாலும், இந்தியாவுக்கு இது பெரும் சாதனையாகவே இருக்கும்.

சந்திரயான் (சந்திராயணம் அல்ல) என்பது “சந்திரனுக்குப் போகும் விண்கலம்”.

புவிமீதுள்ள ஈர்ப்பு விசை காரணமாக, மேலே எறியப்பட்ட பொருள்கள் புவிப் பரப்பின்மீது விழுவதும், பூமியைச் சுற்றி சந்திரன் சுற்றிவருவதும் ஒரே அடிப்படையில் இயங்குவதே என்று நியூட்டன் சரியாகப் புரிந்துகொண்டார். சந்திரனும், பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, பூமியின்மீது விழுகிறது. ஆனால் அதற்கு பக்கவாட்டிலும் வேகம் இருப்பதால், சுற்றிச் சுற்றி வருகிறது.

பூமிக்கு மேல் சற்று உயரத்திலிருந்து ஒரு கல்லைக் கீழே போடுங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கல்லின் பக்கவாட்டு வேகத்தை அதிகரியுங்கள். கல், தள்ளிப் போய் விழும்.

இப்போது, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதே நேரம் கல்லின் உயரத்தையும் அதிகரியுங்கள். இப்போது, கல் வெகு தொலைவில் தள்ளி விழும். ஆனால் அது, பூமியின் வளைவைத் தாண்டிப்போய் விழும். அப்படி விழுவது ஒரேயடியாக எங்கோ “கீழே” போய் விழாது. ஏனெனில், பூமி, அந்தக் கல்லை வளைத்துத் தன் பக்கம் இழுக்கும். எனவே அது பூமியை நோக்கித் திரும்பும். ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் பூமியின்மீது விழாமல், சுற்றிச் சுற்றி வந்தபடியே இருக்கும்.

இப்படிச் சுற்றி வரும் பாதை, ஒரு நீள் வட்டம். இதை நியூட்டனுக்குமுன், கெப்ளர் கண்டுபிடித்திருந்தார். அதற்குமுன்கூடச் சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். ஆனால் தெளிவாக இதனைக் குறிப்பிட்டவர் கெப்ளர்தான்.

டைகோ பிராஹி (1546-1601) என்ற டென்மார்க் நாட்டு வானவியல் அறிஞர் கோள்களின் சுற்றுப்பாதையை கவனமாக ஆராய்ந்து குறிப்பெடுத்து வைத்திருந்தார். இவரிடம் மாணவராக இருந்தவர்தான் ஜோஹானஸ் கெப்ளர் (1571-1630) என்ற ஜெர்மானியர். தனது ஆசிரியர் பிராஹி விட்டுச்சென்ற குறிப்புகளைக் கொண்டு, கோள்களின் சுற்றுப்பாதை நீள்வட்டமே என்பதை கெப்ளர் கண்டுபிடித்தார்.

ஐசக் நியூட்டன் (1643-1727), இதற்கான கோட்பாட்டுச் சட்டகத்தை உருவாக்கினார். நியூட்டன் செய்த முதல் காரியம், சந்திரனும் பூமியின்மீது விழும் ஒரு கல் என்றால், அந்தக் கல் பூமியைச் சுற்றிவர எவ்வளவு நேரமாகும் என்பதை தனது கணிதமுறை மூலம் கண்டுபிடிப்பது. அவரது விடை சுமார் 27 நாள்கள் என்று வந்தது. இதுதான் நாம் பார்ப்பதும்கூட.

சந்திரன், பூமியைச் சுற்றும் நீள்வட்டப் பாதை, முழுவட்டப் பாதைக்கு மிக நெருக்கமான நீள்வட்டம். அதாவது கிட்டத்தட்ட ஒரு வட்டப்பாதை.

நீள்வட்டப் பாதைகளில் இரு குவியங்கள் (foci) உண்டு. இதில் ஒரு குவியத்தில்தான் கனமான பொருள் இருக்கும். இந்தப் பொருளைச் சுற்றித்தான் நீள்வட்டப்பாதையில் மற்றொரு கனம் குறைந்த பொருள் சுற்றிவரும். இந்த நீள்வட்டப் பாதையில், அண்மை நிலை (Perigee), தொலைவு நிலை (Apogee) என்று இரண்டு நிலைகள் இருக்கும். முதற்கோளுக்கு மிக அருகில் துணைக்கோள் இருக்கும் நிலைதான் அண்மை நிலை. மிகத் தொலைவில் இருக்கும் நிலைதான் தொலைவு நிலை.

பூமிக்கு மேல் அனுப்பப்படும் செயற்கைக்கோள்கள் அனைத்தும் இதேபோன்ற நீள்வட்டப் பாதையில்தான் சுற்றுகின்றன. ஒருசில சிறப்புச் செயற்கைக்கோள்கள், நிலநடுக்கோட்டுக்கு நேர் மேலே, வட்டப்பாதையில் சுற்றுகின்றன. இவற்றுக்கு இணைச்சுற்று செயற்கைக்கோள்கள் (geo-statinory satellites) என்று பெயர். இவைமூலம்தான் நமக்கு செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையும், தொலைபேசி இணைப்புகளும் கிடைக்கின்றன.

பூமிக்கு மேல் சுற்றும் செயற்கைக்கோள்கள், எந்த உயரத்தில் இருக்கின்றன என்பதைப் பொருத்து, அவை பூமியைச் சுற்றிவரும் வேகம் இருக்கும். பூமிக்கு அருகில் இருந்தால், வேகம் அதிகமாக இருக்கும். பூமியிலிருந்து விலகிப் போகப்போக, சுற்றுவேகம் குறையும். இதை அடிப்படையாக வைத்துத்தான் இணைச்சுற்று செயற்கைக்கோளின் உயரம் கணக்கிடப்படுகிறது.

இந்த உயரம், பூமிக்குமேல் சுமார் 36,000 கி.மீ உள்ளது.

செயற்கைக்கோள்களை பூமிக்கு மேல் எப்படிச் செலுத்துவது? இதற்கு லாஞ்ச் வெஹிகிள் - ஏவும் வாகனம் - ஒன்று தேவை. துருவங்களுக்கு மேல் கோள்களைச் செலுத்துவது சற்றே எளிது. ஆனால், நிலநடுக்கோட்டுக்கு மேல் செலுத்துவது கடினம். அதிக வலுவுள்ள வாகனம் தேவை. இந்தியாவின் PSLV (Polar Satellite Launch Vehicle) இந்தத் திறனை உடையது. ஆரம்பத்தில் துருவத்தின்மேல் செயற்கைக்கோளை ஏவ உருவாக்கப்பட்ட இந்த வாகனம் இன்று நிலநடுக்கோட்டுக்குமேல் இணைச்சுற்று செயற்கைக்கோளை ஏவினாலும், பழைய பெயரான ‘துருவப்பாதை செயற்கைக்கோள் ஏவு வாகனம்’ என்பதே நிலைத்துள்ளது.

இந்தியாவின் வானியல் சாதனைகளில், இணைச்சுற்று செயற்கைக்கோள்களை அனுப்பக்கூடிய வாகனங்களை உருவாக்கியதை மிக முக்கியமானது என்று சொல்லலாம். அதற்கு அடுத்த கட்டம், இப்போது உருவாக்கியிருக்கும் சந்திரனுக்குச் செல்லும் வாகனம் (சந்திரயான்).

பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டிச் செல்லவேண்டும் என்றால், ஒரு வாகனத்துக்கு அதிகமான வேகம் இருக்கவேண்டும். பூமியின் மேல்பரப்பிலிருந்து ஒரேயடியாக இதனைச் செய்யவேண்டும் என்றால், விநாடிக்கு 11.2 கி.மீ வேகத்தில் பூமியின் மேல்பரப்பிலிருந்து கிளம்பவேண்டும். அந்த வேகத்தில் கிளம்பினால், பூமியின் காற்றுமண்டலம், கடுமையான உராய்வை ஏற்படுத்தி, பிரச்னையைக் கிளப்பும். வாகனம் எரிந்துவிடலாம்.


இதனால், ஆரம்பத்தில் வேகத்தைக் குறைத்து, முதலில் ஒரு சுற்றுப்பாதைக்குச் செல்வார்கள். சந்திரயான் முதலில் செல்லவிருக்கும் சுற்றுப்பாதைக்கு GTO (Geosynchronous Transfer Orbit - பூமியின் இணைச்சுற்று மாற்றல் பாதை) என்று பெயர். இந்தச் சுற்றுப்பாதையில் அண்மை நிலை பூமிக்கு மேல் 240 கி.மீ. தொலைவு நிலை 36,000 கி.மீ. என்று இருக்கும். ஆகா! 36,000 கி.மீ. என்பதை மேலே பார்த்தோமே? ஆம். இணைச்சுற்றுப் பாதையின் உயரம்தான் அது. ஆனால் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோள், அதே உயரத்தில், வட்டப்பாதையில் சுற்றிவரும். இந்த GTO ஒரு புள்ளியில்தான் 36,000 கி.மீ.-ஐ அடையும். மற்றொரு பக்கம், அண்மை நிலையில் பூமிக்கு வெகு அருகில், 240 கி.மீ. தொலைவில் இருக்கும். இதுபோன்ற பாதையைத் தேர்ந்தெடுத்துதான் ஓர் இணைச்சுற்று செயற்கைக்கோளை விடுவிப்பார்கள். பிறகு சிறிது சிறிதாக, பாதையை மாற்றி, முழுவட்ட இணைச்சுற்று செயற்கைக்கோள் பாதைக்கு அந்தக் கோளைக் கொண்டுவருவார்கள்.

சந்திரயான், இந்த GTO-விலிருந்து, மேலும் நீண்ட ஒரு நீள்வட்டப் பாதைக்குச் செல்லும். இதற்கு ETO (Earth Transfer Orbit - பூமியிலிருந்து வெளியே செல்வதற்கான மாற்றல் பாதை) என்று பெயர்.

ஒரு வட்டப்பாதையில் இருந்து மற்றொரு வட்டப்பாதைக்கு எப்படிச் செல்வது? விண்கலத்தில் உள்ள ஆன் - போர்ட் மோட்டார்கள்மூலம் வேகத்தை ஒரு குறிப்பிட்ட திசையில் கூட்டுவதன்மூலம் அல்லது குறைப்பதன்மூலம் வட்டப்பாதைகளை மாற்றலாம். எவ்வளவு கூட்டினால், குறைத்தால், நீள்வட்டப்பாதையின் அண்மை நிலை, தொலைவு நிலை எப்படி மாறும் என்பதற்குச் சமன்பாடுகள் உள்ளன.

ETO-வில் இருக்கும்போது, விண்கலத்தின் திசையை சற்றே மாற்றி, சந்திரனை நோக்கி, LTT (Lunar Transfer Trajectory - சந்திரனுக்கான மாற்றல் பாதை) என்ற பாதையில் செலுத்துவார்கள்.

இதற்கிடையே, ஏவு வாகனம் கிளம்பிய நேரத்திலிருந்து இப்போதைக்குள் சந்திரன் ஒரு குறிப்பிட்ட தொலைவு நகர்ந்திருக்கும் (ஐ.எஸ்.ஆர்.ஓ கொடுத்துள்ள படத்தில் காணவும்). அதைக் கணக்கில் எடுத்து, சந்திரயான், சரியான வழியில் நகர்ந்து, சந்திரனின் சுழற்சி மண்டலத்துக்குள் வரும். இந்தச் செயல்பாட்டுக்கு LOI (Lunar Orbit Insertion - சந்திரனைச் சுற்றும் பாதைக்குள் செலுத்துதல்) என்று பெயர்.

இங்கு, ஆரம்பத்தில், 1000 கி.மீ. உயரத்தில் உள்ள ஒரு நீள்வட்டத்துக்குள் சுற்றும் சந்திரயான், சிறிது சிறிதாக வேகத்தை மாற்றி, 100 கி.மீ. உயரத்துக்குள் வந்துசேரும். சந்திரனின் துருவங்களுக்கு மேலாகச் சுற்றிவரும்.

இந்த உயரத்தில், சுமார் இரண்டு வருடங்கள் சந்திரனைச் சுற்றப்போகும் இந்த வாகனம், பல செயல்களைச் செய்யும். சந்திரனில் என்னென்ன உலோகங்கள் உள்ளன, எந்த அளவுக்கு உள்ளன என்பதைக் கண்டறிய முற்படும். என்ன தாதுக்கள் உள்ளன என்று பார்க்கும். சந்திரனின் மேல்பரப்பு எப்படி ஏறி இறங்கியிருக்கிறது, மலைகளா, முகடுகளா, பள்ளங்களா என்று ஆராய்ந்து படம் பிடிக்கும்.
.



Source :  http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_21.html

Monday, October 20, 2008

ணவு பற்றாக்குறைக்கு காரணம்!!

ஜார்ஜ் புஷ்ஷிற்கு தெரியாவிட்டால் பரவாயில்லை; நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
விலைவாசி உயர்விற்குக் காரணம் ஆசியர்கள் என்றும் உணவு பற்றாக்குறைக்கு
காரணமும் ஆசியர்களே என்றும் ஜார்ஜ் புஷ் பேசியதை அனைவரும் அறிவோம்.
கீழே உள்ள படங்களைப் பாருங்கள் யார் காரணம் என்று தெரியும்!

1.GERMANY:
The Melander family of Bargteheide - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: 375.39 Euros or $500.07 


2.UNITED STATES:
The Revis family of North Carolina - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: $341.98


3. JAPAN:
The Ukita family of Kodaira City - 2 adults , 2 teenagers
Food expenditure for one week: 37 , 699 Yen or $317.25



4 ITALY:
The Manzo family of Sicily - 2 adults , 3 kids
Food expenditure for one week: 214.36 Euros or $260.11

5.MEXICO:
The Casales family of Cuernavaca - 2 adults , 3 kids
Food expenditure for one week: 1 , 862.78 Mexican Pesos or $189.09




6.POLAND:
The Sobczynscy family of Konstancin-Jeziorna - 4 adults , 1 teenager
Food expenditure for one week: 582.48 Zlotys or $151.27



7.EGYPT:
The Ahmed family of Cairo - 7 adults , 5 kids
Food expenditure for one week: 387.85 Egyptian Pounds or $68.53



8.ECUADOR:
The Ayme family of Tingo - 4 adults , 5 teenagers
Food expenditure for one week: $31.55


9.BHUTAN:
The Namgay family of Shingkhey Village - 7 adults , 6 kids
Food expenditure for one week: 224.93 ngultrum or $5.03


10.CHAD:
The Aboubakar family of Breidjing Camp - 3 adults , 3 kids
Food expenditure for one week: 685 CFA Francs or $1.23
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள் யார் காரணம்?

Source  :  http://devakottai.blogspot.com/2008/10/blog-post.html

Friday, October 17, 2008

உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்

உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்
இறையன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் தன்னைதற்காத்துகொள்வதற்காக ஏதேனும் ஒரு தற்காப்பு முறையை பயன்படுத்தும் இந்த பதிவில் நாம் சில விலங்குகள் தன்னை எவ்வாறு தற்காத்து கொள்கிறது என்பதை காண்போமா.

1. எறும்புதின்னி (Pangolin): எதிரியை கண்டவுடன் அல்லது உயிர்க்கு அச்சுறுத்தல் வரும் வேளையில் பந்து போன்று உருண்டுகொள்ளும்.
2. Spiny lobster: கண்களுக்கு அடிபகுதியில் காணப்படும் நீட்சிகளை வேகமாக தேய்க்கும் போது திகில்லூடகூடிய சத்தத்தை எழுப்பும்....அப்புறம் என்ன எதிரி பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு ஓடும்.3. Spotted puffer fishஇவை எதிரி விலங்குகளை கண்டவுடன் மிக வேகமாக தண்ணீரை குடித்து தனது உடலை மிகபெரியதாக மாற்றி பயமுறுத்தும்........4.Beetle's: இவை எதிரியை கண்டவுடன் தன் பின்புறத்தின் வழியே காற்றை (Hot Gas) விடும்...அப்புறம் என்ன மூக்கை பிடித்துவிட்டு ஓடவேண்டியதுதான்.5. Flying fish: அப்புறம் என்ன படத்தை பார்த்தாலே புரியுமே6. Skunksஎதிரியை பார்த்தவுடன் தனது வாலை தூக்கி பயமுறுத்தும், அப்படியும் பயபடவில்லைஎனில்...அப்புறம் தான் அது தனது வேலையே காட்டும், மெதுவாக பின்புறத்தை தூக்கி துர்நாற்ற வாயுவை விடும்... அவ்வளவுதான் ஊரே நாறும் (அமெரிக்காவில் சிலநேரம் காரில் செல்லும் போது ....உவ்வே)7. squid: எதிரியை பாத்தவுடன் வேகமாக தான் உடலில் உள்ள இங்க் சுரப்பியின் மூலமாக இங்கை வெளியேற்றும் .....அவ்ளவுதான் அந்த இடமே கலங்கலாக மாறிவிடும்....எஸ்கேப்8. Lionfish: முதுகில் உள்ள முள்ளானது விஷத்தால் ஆனது.9. Garden Lizard: மரத்திலோ அல்லது பாறையிலோ இவை இருந்தால் கண்டுபிடிக்கமுடியாது.
10. Moray eel: பார்த்தாலே பயமயிருக்குமே ... அதோட பல்லுதான் ஆயுதம்.11. சரி ...நம்முடைய தற்காப்பு ஆயுதம் என்ன? 

Source : http://tamilansuvadu.blogspot.com/2008/10/blog-post_15.html

விளம்பரங்கள்!!

ஏற்கெனவே பார்த்தவங்க இன்னொரு தபா பார்த்து ரசிங்கபார்க்காதவங்கபார்த்து என்ஜாய் பண்ணுங்கோ...

டேய் மோட்டார ஆப் பண்ணு ரொம்பி கீழ போகபோகுது.....

மார்கெட்டுக்கு போனமாதிரியும் ஆச்சுexercise செஞ்ச மாதிரியும் ஆச்சு.

அப்பவே சொன்னேன் கேட்டீயா செல்லம்இப்ப பாரு முகமெல்லாம்ஆயுடுச்சு.

பில்டிங்குல பெயிண்ட் அடிக்க சொன்ன தரையில இப்படி கொட்டி நாசம்பண்ணிவச்சிருகானுக.

பாவி பய சிமெண்ட் ஈரம் காயரத்துகுள்ள இப்படி பண்ணிட்டானே...

எங்க இருந்துடா வரீங்க...

அவங்க ஊருல அன்புமணி ராமதாஸ் இல்ல போல அதான் இவ்வளோதைரியம்.

நல்ல வேலை நாம தப்பிச்சோம்.

சும்மா குடுதானுங்கனு பார்த்தா... இப்படி ஒரு பொம்மைய போட்டு நம்ளகூரியர்பாய் மாதரி ஆக்கிடாங்களே

இதெல்லாம் பார்த்து நம்பிடாதீககாசு வங்கிடோமேனுஇப்படிபண்ணிட்டுருக்கேன்.


சீமேன்னைய கம்மியா ஊத்துங்கடானா கேக்கறாங்களா...

என்னமே இடுப்பு புடுச்சிகிச்ச்சா... iodex வேணுமா?


என்னங்க நல்லா இருந்துச்சாகருத்த சொல்லிபுட்டு போங்க...

Source : 
http://24-7teakadai.blogspot.com/2008/10/blog-post_16.html