Monday, August 18, 2008

ஆம்பிளை அழக்கூடாது!! தெரியுமா..


ஏழெட்டு வயது சிறுவனாக இருந்தபோது என் மனதில் ஒரு அசைக்க முடியாத எண்ணம் வேரூன்றியிருந்தது. 'ஆம்பிளைப் பிள்ளை அழக் கூடாது' என்பதுதான் அது. அந்தச் சின்ன வயதில் அப்படி ஒரு 'நல்லொழுக்கத்தை' என்னிடம் விதைத்தது யாரோ தெரியாது. ஆனால், அதை நான் மிகக் கடுமையாகக் கடைப்பிடித்தது மட்டும் உண்மை.

'என்ன துன்பம் வந்தாலும் அழக் கூடாது' என்ற வைராக்கியம் என்னிடம் உச்சத்தில் இருந்தபோதுதான் அந்த மிகப் பெரும் சோகம் நேர்ந்தது. பிறந்தது முதல் என்னை மார்மீதும் தோள்மீதும் தூக்கி வளர்த்த என் பாட்டி, திடீரென்று மரணம் அடைந்து விட்டார். எப்போதும் ஒரு வித மெல்லிய புன்னகையை மட்டுமே இதழ்களில் தவழ விடும் என் அப்பா, ஓவென்று கதறி அழுத காட்சியை அன்றுதான் நான் முதன்முதலில் பார்த்தேன். அவ்வப்போது பாட்டியைப் பற்றி என்னிடம் (எனக்குப் புரியாது என்ற தைரியத்தில்) குறை சொல்லி புலம்பித் தள்ளும் அம்மாவும் கூட கண்ணீர்க் கடலில் மூழ்கியிருந்தார்.

ஆனால், என் கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வரவில்லை. நான் வர விடவில்லை. 'பாட்டி!' என்று என் உள்ளம் பதைபதைக்கும்போதெல்லாம், 'ஆண் பிள்ளை அழக் கூடாது.. ஆண் பிள்ளை அழக் கூடாது' என்று கிளிப்பிள்ளை போல் எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

ஒரே பேரன் என்ற முறையில் அரிசியிடுதல் முதல் கொள்ளியிடுதல் வரை என்னைத்தான் கை பிடித்துச் செய்ய வைத்தார்கள். அப்போதும் கூட அழுதுவிடக் கூடாது என்ற தவிப்பும் இறுக்கமும்தான் எனக்குள் இருந்ததே தவிர, பாட்டி பற்றிய நினைவுகள் துளியும் இல்லை.

இரண்டு நாட்கள் கடந்தது. எங்கள் உறவினர்களில் பாட்டியின் இறப்புக்கு வர முடியாத மூதாட்டி ஒருவர் ஊரில் இருந்து வந்திருந்தார். "அவ சாவுல கூட இவன் அழலையா" என்று ஆச்சர்யமான அவர், "அழக்கூட தெரியாத இந்தப் பிஞ்சுப் பிள்ளையை விட்டுப் போக உனக்கு எப்படியம்மா மனசு வந்துச்சு!" என்று ஆரம்பித்தார். அநேகமாக அவர் என் பாட்டியின் சக வயது தோழியாக இருக்க வேண்டும். எங்கள் குடும்பம் பற்றி, பாட்டி பற்றி, ஏன்.. என்னைப் பற்றி கூட அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது."குடும்பத்துக்கு ஒரே வாரிசு.. இவன் முகத்தைப் பார்த்துத்தான் உயிரைப் புடிச்சுக்கிட்டுக் கெடக்கேன்னு சொல்லுவாளே.. இப்போ இந்த முகத்தை அலங்கரிச்சுப் பார்க்க அவ இல்லையே" என்றெல்லாம் என்னை கட்டிக் கொண்டு அவர் அழவும் எனக்குள் ஏதோ ஒன்று உருகத் தொடங்கியது.

அம்மாவையும் அப்பாவையும் அதட்டும் சக்தியாக.. எனக்கு மட்டும் பூனைக் குட்டியாக.. திகட்டத் திகட்ட பாசம் வார்த்த ஒரு ஜீவனின் இழப்பு எனக்கு அப்போதுதான் உறைத்தது.என் மழலைப் பொய்களுக்கு புருவம் உயர்த்திய ஒரே நபர் பாட்டிதான். என் உறக்கத்துக்காகவே புதுப்புது 'சிங்கம் கதை'களுக்கு சிருஷ்டி கர்த்தாவானவர் அவர். என் ஐஸ்கிரீம் செலவுகளுக்கென தாத்தாவின் போட்டோவுக்குப் பின்னால், வங்கி நடத்தியவர். 'டாக்டர் ஆகு.. என்ஜினீயராகு..' என்ற பெற்றோரின் குரல்களுக்கு மத்தியில், 'ரொம்ப படிச்சா மூளை குழம்பிடும்' என்றபடி, முந்தானையால் என் முகம் துடைத்தவர்.

அந்த இடுங்கிய கண்களின் இணக்கம்..முன் பற்கள் இல்லாத அந்த இதழ்களின் எச்சில் முத்தம்..அய்யோ பாட்டி!நான் அழுதுவிட்டேன். உறவினர் விக்கித்துப் போக, அம்மாவும் அப்பாவும் பிரம்மித்து நிற்க, யார் சொல்லுக்கும் அடங்காமல் நான் அழுது கொண்டே இருந்தேன். என் பாட்டியின் மீது நான் வைத்திருந்த அன்பை உலகுக்கே உரக்கச் சொல்லிவிட்டதாக ஒரு உணர்வு வந்தது. அமைதி வந்தது. நிம்மதி வந்தது.அன்றிலிருந்து

இன்று வரை இயல்பான உணர்ச்சிகள் எதையும் நான் மறைத்ததில்லை. சிரிப்பும் அழுகையும் எல்லா மனிதர்களுக்கும் பொது. ஆண் பெண்பேதமெல்லாம் அதில் கிடையாது என்பதை திடமாக நம்பினேன். எனக்கும் ஒரு மகன் பிறந்த போது, நான் அவனுக்குச் சொல்லி வளர்த்த முதல் அறிவுரை இதுதான்.. 'எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்ணீரை வெளிப்படுத்தத் துணிபவன்தான் உண்மையான ஆண் பிள்ளை!'

சந்திரன்.!
நன்றி : விகடன்

சுவாரஸ்யமான போட்டி.. !!

ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுகிறவனுக்கு வசதியாகப் போயிற்று சாமர்த்தியமாக ஒரு கோட்டை அழிப்பது... மறுபடி அதன் மீதே இன்னொரு கோடு போடுவது... இப்படியே சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சாப்பாட்டு ராமன், இது தெரியாமல் மதியம் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒரு கட்டத்தில் அவன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். கோடு போடுகிறவன் கேட்டான்: என்ன யோசிக்கிறே..? நீ செய்யறது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு! நான் ஒழுங்காத்தானே கோடு போட்டுக்கிட்டு வர்றேன்! சாப்பிடுகிறவன் சொன்னான்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... எல்லாக் கோட்டையும் அழிச்சுடு... மறுபடியும் முதல்லேயிருந்து வரலாம்!






நண்பர்களே... அதிர்ச்சியடையாதீர்கள்.







எல்லையில்லாமல் இட்லிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிற அந்த வயிறு யார் தெரியுமா? அதன் பெயர்: பேராசை!







சாக்ரடீஸ் : பேராசைக்காரனுக்கு உலகமெல்லாம் தந்தாலும்கூட பசி தீராது. மனத் திருப்தியுள்ளவனுக்கு ஒரு துண்டு ரொட்டியே போதுமானது!


Note :இன்னொரு இடத்தில் படித்தில் பிடித்து ‍ இறக்குமதி சரக்கு

Sunday, August 10, 2008

JBC - especailly for Esstee Friends!!

Title : Girls Are Always Forgiven

Tis is Especailly for Esstee - Friends..!

Thursday, August 7, 2008

அன்பு என்பது எல்லோருக்கும் புரியும் மொழி என்பது இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நன்றாக்ப்புரிகிறது.. அல்லவா

Wednesday, August 6, 2008

The House Test!




What the House Test Says About You



You consider yourself important, but no more important than anyone else. You love attention, but you don't feel like you deserve more of it than anyone else.



You are very community oriented. You like to buy local, know your neighbors, and live in a neighborhood that matches your personality.



You are a playful, charming, and seductive person. People feel instantly close to you.



You take good care of your physical appearance. You dress well, stay in shape, and do your best to look great.



You are moved by romance and love. You are optimistic about people, and you love hearing about happy endings.

Monday, August 4, 2008

காய்கறி!!!

எதிர்காலத்தில் காய்கறிகளின் இப்படிக் கூட இருக்கலாம்!!!




Posted by Picasa

ஹும் என்ன ! கொடுமை சார் இது!!!

Saturday, August 2, 2008

இசைமேதை பீத்தோவனின் கதை...

சோகம் எப்படி சுகத்தைத் தரும்? என்று கேட்டுஎவரும் வாதம் செய்ய வேண்டாம்.இசைமேதை பீத்தோவனின் கதையைச் சொல்லியிருக்கிறேன்.கடைசி வரி வரைபடியுங்கள்.அப்புறம் தெரியும் சோகம் எப்படி சுகப்படுமென்று!நிழலாகத் தொடர்ந்த சோகத்திலும், அதை வென்று சாதனை படைத்த மனிதர்ஒருவர் இருந்திருக்கிறார். சரித்திரத்தில் இடம் பிடித்து இன்று பலருடைய மனதிலும்அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவர்தான் இசை மேதை பீத்தோவன்!உலக சரித்திரத்தில் இடம் பிடிப்பது என்பது என்ன சாதாரணமான விஷயமா?சாதித்துக் காட்டினால் அல்லவா சரித்திரம் வசப்படும்!உலக இசை மேதைகளுக்கான தர வரிசையில் இன்றைக்கும் அவர் இரண்டாவதுஇடத்தில்தான் இருக்கிறார்.(முதல் இடம் மொசார்ட்டிற்கு)விதி எப்பொழுதும் எதிர் அணியில்தான் ஆடும் எண்பார்கள்.பீத்தோவனுக்கு விதி எதிர் அணியில் ஆடியதோடு, அவரைப்பல முறை காயப்படுத்தியும், ஒருமுறை ஆட்டத்தை விட்டு வெளியேற்றவும் முயன்றிருக்கிறது.ஆமாம்! ஒரு முறை தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர், இசையின் மேல்தான் கொண்ட தீராத காதலால் மரணத்தின் விளிம்புவரை சென்றுவிட்டுத் திரும்பியிருக்கிறார்.கொடிது, கொடிது இளமையில் வறுமை என்பார் அவ்வையார். பீத்தோவனுக்குஇளம் வயதில் பசியே பாடமாகவும், வறுமையே வாய்ப்பாடாகவும், இருந்திருக்கிறது.ஒருபக்கம், தினமும் குடித்துவிட்டு அகால நேரங்களில் வீட்டுக்குத் திரும்பிவந்துஅனைவரையும் அடித்துத் துவைக்கும் தந்தை. மறுபுறம், ஏழு குழந்தைகளைப்பெற்றுஅதில் மூன்று குழந்தைகளை வறுமைக்குத் தாரைவார்த்துவிட்டு, மிச்சம் இருக்கும்குழந்தைகளுடன் போராடிக்கொண்டிருக்கும் தாய் மரியா.சந்தோஷத்தையே அறியாத வாழ்க்கை!பீத்தொவனின் தந்தை ஜோஹன் ஜெர்மெனி நாட்டின் பான் (Bonn) நகரில் இருந்தஇசை அரங்கம் ஒன்றில் வாத்தியக்காரராகப் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.அது ஒன்றுதான் சற்று ஆறுதலான விஷயம். தன் தந்தையிடம், அவர் நல்ல மனநிலையில் இருக்கும்போது பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட பீத்தோவன்,தன்னுடைய எட்டாவது வயதிலேயே தனிக் கச்சேரி செய்யும் அளவிற்கு இசையில்ஒரு மேதைத்தனத்தை எட்டிப்பிடித்திருக்கிறார்17.12.1770 ஆம் ஆண்டு பிறந்த பீத்தோவன், தனது 20வது வயதில் ஜெர்மெனியைவிட்டுக் குடிபெயர்ந்து, வீயன்னா நகருக்குத் (Vianna, Austria) தன் நண்பன் ஒருவனுடன்போய்ச்சேர்ந்திருக்கிறார். அங்கே பல அரங்கங்களில் வாசித்ததோடு, இசைக்கான'இசைக் குறிப்பேடுகளை' (Notes) எழுதிக் கொடுத்தும் பிரபலமடைந்திருக்கிறார்.அவர் இசைக்கு மயங்காதவர்களே இல்லை என்னும் நிலை ஏற்பட்டிருக்கிறதுஎன்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.பியானோ இசைக்கலைஞன், இசையமைப்பாளர், இசைப் பயிற்சியாளர் என்றுதன்னுடைய பல்முனைத் திறமைகளை வெளிக்காட்டி மக்களை அசரவைத்தவர்அவர். அந்தக் காலத்தில் இருந்த இசைக்கலைஞர்களைப் போல தேவாலயம்(Church) எதிலும் வேலைக்குச் சேர்ந்து பிழைப்பைக் கவனிக்காமல், கடைசிவரைதன்னிச்சையாகவே இருந்து வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளோடு போராடியமாமனிதர் அவர். இசைப் புரவலர்களால் (Patrons) அவருடைய பணத்தேவைகள்நிறைவேற்றப்பட்டுள்ளது.அவர் பிறந்த தேதி தெரிய வந்ததில் கூட ஒரு சுவாரசியமான தகவல் இருக்கிறது.அவர் மிகவும் பிரபலமானவுடன், அவருடைய பிறந்த நாளைத் தெரிந்து கொள்ளவிரும்பிய ரசிகர்களுக்கு, அவர் பிறந்த கிராமத்தையும், வருடத்தையும், மாதத்தையும்மட்டுமே சொல்ல ஆள் இருந்திருக்கிறது. தேதியைச் சொல்ல ஆளில்லை.விடுவார்களா ரசிகர்கள்? பிறந்த குழந்தைக்கு அது பிறந்து 24 மணி நேரங்களுக்குள்ஞானஸ்தானம் செய்யும் வழக்கம் இருந்ததால், அவர் பிறந்த கிராமத்திலுள்ளதேவாலயத்தின் பதிவேடுகளில் இருந்து, அவருடைய பெற்றோர்களின் பெயரைச்சொல்லித் தேதியை கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஒருவனுக்கு ஒரே நேரத்தில் இரண்டு விபத்து ஏற்பட்டால் எப்படி இருக்கும்?பனை ஏறி விழுந்தவனை, கடா ஏறி மிதித்தமாதிரி என்பார்கள் - அதாவதுபனை மரத்தின் உச்சியில் இருந்து பிடி தவறித் தடால் என்று விழுந்தவனை,அவன் என்ன ஏது என்று நிலைப்படும் முன்பாக, அந்தப் பக்கம் தெறிகெட்டுப்பாய்ச்சலில் ஓடிவந்த காளை மாடு ஒன்று மிதித்து விட்டுப் போனதாம்.அப்படி ஒருஇரட்டை விபத்து பீத்தோவனின் வாழ்க்கையில் அவருடைய முப்பதாவது வயதில்ஏற்பட்டது.மிகவும் விரும்பிக் காதலித்த பெண்ணை அவர் மணந்து கொள்ள முடியாமல்போனது முதல் விபத்து. அவள் பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். அவளுடையபெற்றோர்கள் காட்டிய சிவப்புக் கொடியில் பித்தோவனின் காதல் காணாமல்போய்விட்டது. மனமுடைந்த அவர், தனது இறுதி மூச்சுவரை திருமணமேசெய்து கொள்ளவில்லை.அதே காலகட்டத்தில் அவருடைய செவிகள் கேட்கும் திறனை கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து, பாதி செவிகள் பழுதாகி விட்டன.அடுத்தடுத்த ஆண்டுகளில் அது தொடர்ந்து, கடைசியில் செவிகளுள் இரண்டும்முழுவதும் பழுதாகிவிட்டன.எவ்வளவு கொடுமை பாருங்கள். இசை கேட்கச் செவி வேண்டும். இசைப்பவனுக்குஅது இல்லாமல் கெட்டுக் குட்டிச்சுவராகப் போய்விட்டது என்றால் அவன் எப்படிஇசைப்பான்?ஆனாலும் இசைத்தார். அதுதான் பீத்தோவனின் மன வலிமை.காது கேட்ட காலத்தில் அவர் இசைத்த இரண்டு சிம்பொனிகளை விட, காதுபழுதான பிறகு அவர் இசைத்த மூன்று புது சிம்பொனிகள் அற்புதமாக அமைந்தன.அவருக்கு சரித்திரத்தில் இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன!(செவித்திறன் அற்ற நிலையில் ஒரு இரும்பு கம்பியை பியானோவின் மேல் வைத்து அதன் மற்றொரு முனையை வாயில் கவ்விக்கொண்டு இசைக்கும் பொது இசை அதிர்வுகள் அவர்க்கு கிடைத்தன.இன்றைக்கும் ஏதாவது ஒரு வீட்டின் அழைப்பு மணி இசையில்,தொலை பேசி தானியங்கி இசையில்,அலுவலக வரவேற்பறையில் அவர் இசை கேட்டு கொண்டு தான் இருக்கிறது- thanks to premji's comments). கட்டுரையின் நீளம் கருதி அவர் முத்தாய்ப்பாய் தன்னைப் பற்றித் தன் நண்பர்ஒருவருக்கு எழுதிய கடிதத்திலிருந்த முக்கியமான வரியைச் சொல்லி நிறைவுசெய்கிறேன்."இறைவனால் படைக்கப்பெற்ற மனிதர்களில். மகிழ்ச்சி மறுக்கப்பட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும்"நிதர்சனமான உண்மை!மெழுகுவர்த்தி உருகித்தான், தன்னை எரித்துக்கொண்டுதான் ஒளியைக் கொடுக்கிறதுபீத்தோவனும் அப்படித்தான் தன்னுடைய உருக்கத்தில்தான் இந்த உலகிற்குஅற்புதமாக இசையைக் கொடுத்துவிட்டுப் போனார். அவருடைய சோகங்கள்தான்சுகமான இசையாக வெளிப்பட்டன!.16.3.1827ம் தேதியன்று, தனது இசையரங்கில் சேர்த்துக்கொள்ளக் காலன் அவரைக்கவர்ந்து கொண்டு போய்விட்டான்.சோகத்திலும் ஒரு சுகம் உண்டு. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!

"உலகமயமாக்கல்"

உலகமயமாக்குதலின் உயர்வுக்கு எதைச் சிறப்பாகச் சொல்வாய்?""இளவரசி டயானாவின் மரணத்தைச் சொல்லலாம்!""எப்படி?""பிரிட்டனைச் சேர்ந்த இளவரசி டயானா ஒரு எகிப்திய நண்பனுடன் பிரான்சுநாட்டில் பயணிக்கும்போது சுரங்கப்பாதை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் மரணமடைந்தார்.அவர் பயணித்தது டச்சு நாட்டு இஞ்சின் பொருத்தப் பெற்ற ஜெர்மன்நாட்டுக்கார்,காரை ஓட்டியவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஓட்டுனர். அவர்போட்டிருந்தது ஸ்காட்டிஷ் விஸ்கி. அந்தக் காரைத் துரத்திய மஞ்சள் செய்தியாளர்கள்இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள்.விரட்டும்போது அவர்கள் பயணித்தது ஜப்பான்நாட்டு மோட்டார் சைக்கிள்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்துக்காக்க முயன்றது அமெரிக்க டாக்டர்கள். அவர்கள் பயன்படுத்தியது பிரேசிலில்தயாரிக்கப்பெற்ற மருந்துகள். இந்தத் தகவலை உங்களுக்கு வழங்குபவர் ஒருஇந்தியர். அவர் கணினியில் உபயோகப் படுத்துவது பில் கேட்ஸ் தந்ததொழில் நுட்பம். அதற்குப் பயன்படுவது ஐ.பி.எம் க்ளோன்கள். அதை உள்ளடக்கியதுசைனாவில் தயாரிக்கப்பெற்ற சிலிகான் சிப்புகள் (Chips). பார்ப்பதற்குப் பயன்படுவதுகொரிய நாட்டுத் திரைகள் (Monitors) அந்த மானிட்டரை சிங்கப்பூரில் அசம்பிள் செய்ததுபங்ளா தேசத்தின் தொழிலாளிகள். வாகனங்களில் அவற்றை எடுத்துச் செல்லஉதவியவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த வாகன ஓட்டுனர்கள். கடைசியில் அவற்றைஉங்களுக்கு விற்றவர்கள் சீனர்கள்!"--------------------------இறக்குமதிச் சரக்கு