Sunday, September 28, 2008

படித்ததில் பிடித்தது!!!




கார் / பைக் வச்சிருக்கிரீங்களா ? ஒரு நிமிஷம்......

ஹோட்டல், ஆட்டோ , கடைகள் இவைகளில் எங்கு சென்றாலும் Keep the change சொல்லக்கூடிய ஆளா நீங்க? அப்ப உங்களுக்கு இந்த பதிவு அல்ல. இது சாதாரண மிடில் கிளாஸ் ஆட்களிலிருந்து, "எவனோ ஒருவன் " மாதவன் ரேஞ்சு ஆசாமிகளுக்கும்தான்

என்னதான் ஆயில் விலை குறைந்தாலும் பெட்ரோல் பங்க்ல மட்டும் விலையே குறையில. அதனால எல்லாரும் அதிக மைலேஜ் உள்ள வண்டியா பாத்து பாத்து வாங்கறாங்க. பொதுவா.. பைக் வச்சிருந்தீங்கன்னா, 100க்கு, 200க்கு பெட்ரோல் போடுவோம்(நம்மள மாதிரி) , அதே கார் வச்சிருக்கிறவர்கள் எங்காவது நீண்ட தூர பயணம் என்றால் நேராக பெட்ரோல் பங்க் சென்று டாங்க்கை நிரப்பி கொண்டு சொல்கிறார்கள்.

இப்படி நிரப்பும் போது அளவு சொல்லுவதில்லை மாறாக பெட்ரோல் போடும் ( Loading arm ) பைப்பில் ஒரு Sensor switch இருக்கும். பெட்ரோல் டாங்க் நிரம்பி பெட்ரோல் அந்த பைப்பை தொடும்போது அந்த sensor switch கண்டு உடனடியாக Valveவை மூடிவிடும்.

இப்போது கிழே உள்ள படத்தை கவனியுங்கள். எப்போதும் பங்க்கில் உள்ள டாங்கிலிருந்து எப்போதும் இரண்டு பைப் வரும்.

1. pumping line எனப்படும் பெட்ரோல் போடும் பைப்லைன்- மஞ்சள் நிறம்

2. Spill back line - தேவையை விட அதிகமாக வந்த பெட்ரோலை மீண்டும் டாங்கிற்கே அனுப்பும். - ஊதா நிறம்





அதாவது டாங்க் நிறைந்து பின்பு பைப்பை பெட்ரோல் தொடும் போதுதான் Sensor switch sense செய்கிறது. இந்த இடைப்பட்ட இடைவெளியில் பெட்ரோல் பங்க்கில் மஞ்சள் நிற பைப்பில் இருந்து வெளியேறும் பெட்ரோல் வெளியே சிந்தி விடும் அல்லவா? அந்த அதிகப்படியான பெட்ரோலை திருப்பி அனுப்பத்தான் இந்த ஊதா நிற பைப்.

நீங்கள் காரின் பெட்ரோல் டாங்க்கை நிரப்ப சொன்னீர்கள் என்றால் மேற்சொன்ன அதிகப்படியான் பெட்ரோலும் மீட்டரில் ஓடியிருக்கும் ஆனால் அது திரும்பவும் பங்க்கிற்கே சென்றிருக்கும். இப்படி அதிகப்படியாக சென்று திரும்பிய பெட்ரோலுக்கும் நீங்கள் பணம் செலுத்த வேண்டும்.

அதனால் எப்போதும் டாங்க்கை நிரப்ப சொல்லாதீர்கள்.

Note : http://kadaisipakkam.blogspot.com/2008/09/blog-post_24.html லிருந்து காப்பி அடிக்கப்பட்டது

Tuesday, September 16, 2008

படித்ததில் பிடித்தது!!

வீழும் கோபுரங்கள்

.
டிவி செய்திகளில் நியூயார்க் நகர இரட்டைகோபுரங்கள் விமானங்களால் தகர்க்கப்பட்டு புகை சூழ அவை விழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கோபுரங்கள் அப்படியே நின்றிருக்க உள்ளிருக்கும் பில்லியன் டாலர் நிறுவனங்கள் பொலா பொலாவென உதிர்வதை பார்த்திருக்கின்றீர்களா? இப்போதெல்லாம் வால் ஸ்டிரீட்டில் இது வாரம் தோறும் நிகழும் நிகழ்வாகிவிட்டது. விண்மீன்கள் விழுவதைப்போல நேற்று வரை ஜொலித்துக் கொண்டிருந்த நிதி நிறுவனங்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு சொல்ல ஒன்றா இரண்டா?. அருமையான மென்பொருள் தீர்வுகளை வழங்க நம் மென்பொருள் வல்லுனர்கள் தயார்தாம், ஆனால் அதனை பயன்படுத்த அல்லது பயன்படுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இதனால் பெஸிமிஸ்டாய் சொன்னால் டெக்னாலஜி நிறுவனங்களுக்கும் தொலைவு அத்தனை வெளிச்சமாயில்லை.

1929 ஆம் ஆண்டுகளில் எட்கர் கேய்ஸ் (Edgar Cayce) என்பவர் தூங்கியவாறே வரும் காலத்தில் நடக்கப்போவதை புட்டு புட்டு வைத்துக்கொண்டிருந்தார். மிகப்பெரிய நிதிச்சிக்கல் ஒன்று வரப்போகின்றது. (a great disturbance in financial circles) அவரவர் பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு பத்திரமாக வைத்திருங்கள் என எல்லாருக்கும் அபய குரல் கொடுத்தார். நியூயார்க்கில் பங்கு வர்த்தகம் உச்சக்கட்டத்தில் இருந்த காலம் அது. யாரும் அவரை நம்பத்தயாராயில்லை. ஆனால் நடந்தது என்ன? அவர் சொன்ன மாதிரியே ஆறே மாததில் நியூயார்க் பங்கு சந்தை மொத்தமாய் வீழ்ந்தது. மிகக்கொடூரமான Great Depression எனப்பட்ட உலகளாவிய பொருளாதார மந்த நிலைமைக்கு உலகம் தள்ளப்பட்டது. பெரும்பாலான மக்கள் வேலை இழந்தனர். வங்கிகளில் போடப்பட்டிருந்த தங்கள் பணங்கள் திரும்ப கிடைக்கவில்லை. சோற்றுக்காக வீடு கார் எல்லாவற்றையும் விற்கும் நிலமைக்கு ஆளாயினர். பசியும் பட்டினியும் எங்கும் நிலவியது. வாழ்வே சூன்யமாயிற்று இனிமேல் எழும்பவே முடியாதுவென்றிருந்த நிலையில் இந்த "மகா மந்த நிலமை"யிலிருந்து உலகை எழுப்பிவிட்டது எது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள். இரண்டாம் உலகப்போர் தான். போர் வந்ததும் அதற்கான ஆயத்தங்கள் செய்ய, தளவாடங்கள் செய்ய அது இதுவென ஏகபட்ட வேலைவாய்ப்புகள் மீண்டும் உருவாகின. மக்களிடையே பணம் புரளத்தொடங்கியது. இப்படி கோடிக்கணக்கில் உயிர்களை கொள்ளை கொண்ட ஒரு உலகப்போரினால் உலகம் சகஜநிலமைக்குத் திரும்பியது.

அது மட்டுமல்லாமல் முதலாம் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் வரப்போவது பற்றியும் எட்கர் கேய்ஸ் முன்னமே சொல்லியிருந்தாராம். 2004ஆம் ஆண்டு இந்தியாவை தாக்கிய சுனாமியையும் எட்கர் கேய்ஸ் ""Watch for [strife] . . . in the Indian Ocean... " என 1941-லேயே சொன்னதாக சொல்கின்றார்கள்.

இப்படி நடக்கப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே கூறும் அபூர்வ மனித சக்தியை Extrasensory perception (ESP) என்கின்றார்கள். ஆனாலும் விஞ்ஞானிகள் இன்னும் அதை நம்பத்தயாராயில்லை. அதற்கும் புதிதாய் அவர்கள் ஏதாவது துகள்கள் கண்டுபிடிக்கவேண்டும்.

1945ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று எட்கர் கேய்ஸ் தனது உடல் இந்தமாதம் ஐந்தாம் தியதி அடக்கம் செய்யப்படும் என உலகுக்கு முன்அறிவித்தார். அப்படியே நடந்தது.